ஸ்பெயின்: விமான ஓடுபாதையில் பயணி ஓடியதால் பரபரப்பு!

--

மாட்ரிட்:

டும் விமானத்தில் ஏற முயன்ற நபரால் விமான நிலையம் பரபரப்பானது.

spain

ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் விமான நிலையத்தில், விமான ஓடு பாதையில் கிளம்பிய விமானத்தில் ஏற முயன்ற வாலிபரால் விமான நிலையமே பரபரப்பானது. அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார்.

ஸ்பெயின் வந்திருந்த பொலிவியாவை சேர்த்வர், மாட்ரிட்டிலிருந்நது கிரான்கெனரியா செல்வதற்காக விமான நிலையத்தில் பயணச்சீட்டு எடுத்து காத்திருந்தார். ஆனால் விமானம் புறப்படும்வரை அவர் விமானத்தில் ஏறாமல் ஞாபக மறதியால் இருந்தார்.

விமானம் புறப்பட்டு ஓடு பாதையில் செல்வதை கண்ட, அந்த நபர், விமான ஓடுபாதையை நோக்கி கையை அசைத்துக்கொண்டே சென்றார். விமானம் அதற்குள் பறந்துவிட்டது.

flight

திடீரென விமானத்தை நோக்கி ஒருவர் ஓடி வருவதை கண்ட காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். தீவிரவாதியாக இருக்குமோ என நினைத்து அதிரடியாக அவரை மடக்கி கைது செய்யதனர்.

விசாரணையில்,  இதில் விமானத்தை பிடிப்பதற்காகத்தான் தாம் ஓடி வந்ததாக அந்த வாலிபர் கூறினார். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.