மாட்ரிட்: ஸ்பெயினில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள், இறப்புகள் 2 நாள் உயர்வுக்குப் பிறகு மீண்டும் குறைந்துவிட்டன.

கொரோனாவால் புதியதாக 5756 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். 728 பேருக்கு கொரோனா பலியாகி இருந்தனர். 24 மணி நேரத்துக்கு முன்பு, இது 6,180 ஆகவும், பலி எண்ணிக்கை 757 ஆகவும் இருந்திருக்கிறது.

ஒட்டுமொத்தமாக, ஸ்பெயினில் COVID-19 தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து 152,446 பேருக்கு நோய்த் தொற்று இருந்தது. அதன் எதிரொலியாக, 15,283 பேர் பலியாகினர்.

அமெரிக்கா மற்றும் இத்தாலியுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, உலகின் மிக கடுமையான பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஒன்றாக ஸ்பெயின் இருக்கிறது. இருப்பினும், அந்நாட்டில், கொரோனா தொற்றில் இருந்து 52,000 க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.