மாட்ரிட்: கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வது தொடர்பாக, நாட்டின் விதிமுறைகளை மீறியதற்காக, ஸ்பெயின் நாட்டின் முதன்மை ராணுவ கமாண்டர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இச்சம்பவம், இந்தியா போன்ற விதிமுறைகளை காற்றில் பறக்கவிடும் நாடுகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயினில், வீட்டிலேயே மருத்துவக் கவனிப்பை தருவோர் மற்றும் இதர மருத்துவக் களப்பணியாளர்களுக்குத்தான், முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படுகிறது.

ஆனால், இந்த விதிமுறையைப் புறக்கணித்து, அந்நாட்டின் தலைமை ராணுவ கமாண்டர் உள்ளிட்ட சில உயரதிகாரிகள் கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டனர். சில உயர் மருத்துவத்துறை அதிகாரிகளும் இதில் அடக்கம்.

அந்த விவகாரம் விமர்சனங்களைக் கிளப்பவே, அந்நாட்டின் முதன்மை ராணுவ கமாண்டரான மிகேல் ஏஞ்சல் வில்லரோயா ராஜினாமா செய்துள்ளார். அவரின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளது.