அமைச்சரவையில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் ஸ்பெயின் புதிய பிரதமர்

மாட்ரிட்,ஸ்பெயின்

ஸ்பெயின் நாட்டில் புதிதாக பதவி ஏற்றுள்ள பிரதமர் சான்செஸ் தனது அமைச்சரவையில் பெண்களுக்கு அதிக இடங்கள் அளித்துள்ளார்.

ஸ்பெயின் நாட்டின் நாடாளுமன்றத்தில் சோசலிஸ்ட் கட்சிக்கு 350ல் 84 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.   முன்பு ஆட்சி செய்த கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த மாரியானோ ரஜாய் ஊழல் புகார் காரணமாக விலக நேர்ந்த்தது.  அதன் பிறகு கூட்டணிக் கட்சியின் உதவியுண்ட சோசலிஸ்ட் கட்சியை சேர்ண்ட சான்செஸ் பிரதமர் ஆனார்.

சான்செஸ் நேற்று தன் அமைச்சரவையை அறிமுகப்படுத்தி உள்ளார்.   தந்து அமைச்சரவையில் ஒரு விண்வெளி வீரரை விஞ்ஞானத் துறை அமைச்சர் ஆக்கி உள்ளார்.    அதே போல வானிலை துறை அறிஞருக்கு சுற்றுச்சூழல் துறையையும் தீவிரவாதிகளை அடக்கிய ராணுவ வீரருக்கு நீதித் துறையையும் அளித்துள்ளார்.    மேலும் பெரும்பாலான அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பதவிக்கு பெண்களை நியமித்துள்ளார்.