கோவை:
மிழகத்தில் 40 நாட்களுக்குபிறகு இன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால், கடைகள் முன்பு குடிமகன்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கூட்டத்தை தடுக்கும் வகையில் குடிமகன்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கோவையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் ஸ்பெயின் நாட்டை கோர்சே, பெர்பைன் என்ற இருவர்  முதல் 2 டோக்கன்களை பெற்று அசத்தினர். காலையிலேயே கோவை ஆவாரம்பாளையத்தில் அமைந்துள்ள கடை அமைந்துள்ள பகுதிக்கு வந்தவர்கள்,  அங்கு அமைக்கப்பட்டுள்ள  வரிசையில் நின்று முதல் டோக்கன்களை  பெற்று அசத்தினர். இதைக்கண்ட மற்ற குடிமகன்கள்… வெள்ளைக்காரன் வெள்ளக்காரன்தான்டா …   நம்மை மிஞ்சிவிட்டார்களே என்று அங்கலாய்த்தனர்.
 
40 நாட்களுக்கு பின்னர் மதுபான கடைகள் திறக்கப்பட்டதால் ஒவ்வொரு மாநிலத்திலும் குடிமகன்கள் பல கிலோ மீட்டர் தூரம் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கி செல்கின்றனர்.
தமிழகத்தில் இன்று காலை முதலே அனைத்து டாஸ்மாக் கடைகள் முன்பும் குடிமகன்களின் கூட்டம் கூடியது. காவல்துறையினர் அவர்களை சமூக விலகலை கடைபிடித்து வரிசையில் நிற்கும்படி வலியுறத்தி டோக்கன் வழங்கினர்.