எஸ்.பி.பி, வசந்தகுமார் எம்பி இருவரது உடல்நிலையும் சீராக உள்ளது! அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கன்னியா குமரி மாவட்ட காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் ஆகியோர்  உடல்நிலை சீராக இருப்பதாக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கடந்த 11ஆம் தேதி வசந்தகுமாருக்கு, கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அவரது மனைவி தமிழ்செல்விக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இருவரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இந்த நிலையில்   மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வசந்தகுமார் எம்.பி.க்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் ஏற்கனவே அறிவித்தது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

அதுபோல, கொரோனா காரணமாக கடந்த 5ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னணி பாடகர் உடல்நிலையில், பெரும் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், தற்போது  அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தெரிவித்து உள்ளார்.

You may have missed