Random image

பாலசுப்ரமணியத்துக்கு செயற்கை சுவாசம் – எக்மோ சிகிச்சை:மருத்துவமனை அறிக்கை..

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட எஸ்பி.பாலசுப்ரமணியத்துக்கு அவரது உடல்நிலை மோச மானதாக் தீவிர செயற்கை சுவாச கருவி உதவியுடன் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் எஸ்பிபிக்கு கொரோனா தொற்று நெகடிவ் என காலையில் தகவல் வெளியானதால திரையுலகினர் ரசிகர் மைகிழ்ச்சி அடந்தனர். அதை முதலில் மகன் உறுதி செய்த மகன் சரண் நிலையில் பின்னர் மறுத்து வீடியோ வெளியிட்டார், கொரோனா தொற்று நெகடிவ் ஆகியிருக்கிறது என்ற தகவலை என்னை இணைய தளத்தில் வெளியிட வற்புறுத்தினார்கள். எனது தந்தை உடல் நிலை பற்றி தினமும் நான் டாக்டர் களுடன் ஆலோசித்து வருகிறேன்.
அவருக்கு கொரோனா நெகடிவா பாசிடிவா எனபதில்லை உடல்நிலைய்ல் வழக்காம நிலைய்யே நீடிக்கிறது. வென்டிலேட்டர் மற்றும் எக்மோ சிகிச்சை தொடர்கிறது என்றார். அதிர்ஷ்டவசமாக எஸ்பிபி உடல்நிலை சீராக உள்ளது. எனவே அவர் உடல்நிலை பற்றி வதந்திகள் எதுவும் பரப்ப வேண்டாம். ப்ளீஸ்’ என்றார்.
இன்று மாலை மருத்துவமனை சார்பில் எஸ்பிபி உடல்நிலை பற்றி அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறியதாவது: எஸ்பி.பாலசுப்ரமணியம் எம்ஜிஎம் மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்டார். அவர் தொடர்ந்து வென்ட்டிலேட்டர் மற்றும் எக்மோ சிகிச்சையுடன் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். அவரது தற்போதைய உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவ குழுவினர் அவரது உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இவ்வாறு மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எஸ்பிபிக்கு கொரோனா தொற்று, எஸ்பிபி உடல்நிலை சீராக உள்ளது, செயற்கை எக்மோ கிச்சையில் எஸ்பிபி, தீவிர சிகிச்சை தொடர்கிறது,