எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை பற்றி அவரது மகன் சரண் பேட்டி..

திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பால சுப்ரமணியம் கொரோனா தொற்றால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை குறித்து இன்று அறிக்கை வெளி யிட்ட மருத்துவமனை எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை மோசமானதையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிப் பதாக கூறப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திரையுலகினர் பாலசுப்ர மணியம் குணம் அடைய வேண்டும் என்று மெசேஜ் பகிர்ந்த வருகின்றனர்.


டைரக்டர் பாரதிராஜா, நடிகை ராதிகா, இசை அமைப்பாளர்கள் ஏஆர் ரஹ்மான், அனிருத் உள்ளிட்ட பலரும் பாலசுப்ர மணியம் உடல் நலம் அடைந்து திரும்ப பிரார்த்திப்பதாக மெசேஜில் தெரிவித்தி ருந்தனர். இந்நிலையில் பாலசுப்ரமணியம் உடல் நிலை குறித்து அவரது மகன் எஸ்பி.பி.சரண் பேட்டி அளித்தார். அவர் கூறும்போது,’எஸ்.பி.பி.யின் உடல்நிலை அச்சப்படும் அளவிற்கு மோசமாக இல்லை. நலமாகவே இருக்கிறார்’ என கூறினார்.
எஸ்.பி.பி பற்றி அவரது மகன் சரண் சொல்லியிருக்கும் தகவல் திரையல கினரையும் ரசிகர்களையும் ஆறுதல் அடையச் செய்திருக்கிறது.