மருத்துவமனையில் எஸ் பி பி யின் கடைசி வீடியோ ….!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடியுள்ளவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனாவையும் வென்று, 50 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த அவர், செப்டம்பர் 25 பிற்பகல் ஒரு மணியளவில் காலமானார்.

அவர் மறைந்தாலும் அவரின் குரல் இன்னும் ஒளித்து கொண்டு தான் இருக்கிறது . ஒவ்வொரு நாளும் அவரை மறக்க முடியாமல் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அவரை பற்றின விஷயங்களை பகிர்ந்து கொண்டு தான் இருக்கின்றனர் .

இந்நிலையில் கொரோனா தொற்றில் மருத்துவமணையில் அனுமதித்த ஓரிரு நாட்களில் எஸ் பி பி கவலைக்கிடம் என செய்தி பரவியது . அனைவரும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர் .

Video Courtesy : Cinema Paradise

சற்று தேறியதும் இதையறிந்த எஸ் பி பி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில் தான் நலமாக இருப்பதாகவும் , யாரும் கவலை பட வேண்டாம் என்றும் கூறியுள்ளார் . மேலும் தன் மேல் நீங்கள் வைத்திருக்கும் அன்பு தனக்கு புரிகிறது என கூறியிருக்கும் எஸ் பி பி அனைவரையும் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தினார் .