‘அஜித்தை அறிமுகப்படுத்தியது நான் தான்’ : எஸ் பி பி

 

அஜித்தை அறிமுகப்படுத்தியது தான்தான் என பிரபல பின்னணிப் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் விஜய் டிவி ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

சமீபத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அஜித் பாடல் ஒன்றை சிறுவன் ஒருவன் பாடினான். அவன் பாடி முடித்ததும் எனது மகன் சரணும் அஜித்தும் கிளாஸ் மேட்ஸ். இவங்க ரெண்டு பேரும் மெட்ரிகுலேஷன் தேர்வு ஆந்திராவுல தான் போய் எழுதுவாங்க. முதன் முதலில் விளம்பர படங்களில் அஜித் நடித்துக் கொண்டிருக்கும் போது, சரணுடைய உடை மற்றும் ஷூ அணிந்து செல்வார். அது அவருக்கு செண்டிமென்ட்.

அஜித் முதன் முதலில் ஹீரோவாக நடிச்சது தெலுங்கு படம். அவர அந்த தயாரிப்பாளருக்கு அறிமுகப்படுத்துனது நான் தான். எனக்கு அவர் கிட்ட பிடிச்சது என்ன தெரியுமா? தேவையில்லாம எந்த நியூஸ் பேப்பருக்கும் பேட்டி கொடுக்க மாட்டாரு. டிவியில் தேவையில்லாம பேச மாட்டாரு. சமூக வலைதளங்களில் எதாவது கமெண்ட் பண்ணி டென்சன் படுறதோ கிடையாது’ என்றார்.