எஸ்.பி.பி இசையமைத்துப் பாடியுள்ள கொரோனா விழிப்புணர்வு பாடல்….!

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 700க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 17-ஐத் தொட்டிருக்கிறது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் கொரோனா வைரஸ் தொற்று குறித்த விழிப்புணர்வு பாடல் ஒன்றைப் பாடி, அதனை வீடியோவாக வெளியிட்டுள்ளார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

தமிழில் வைரமுத்து எழுதி, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார் .