எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு மைசூரு பல்கலை கழகத்தில் வெண்கலச்சிலை…

 

இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் சினிமா பாடல்கள் பாடி, சாதனை படைத்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த ஆண்டு மரணம் அடைந்தார்.

அவருக்கு கர்நாடக மாநிலம் மைசூரு பல்கலைகழகத்தில் வெண்கலச்சிலை அமைக்கப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை இசை அமைப்பாளர் ஹம்சலேகா செய்துள்ளார்.

எஸ்.பி.பி.யின் மார்மளவு வெண்கலச்சிலையை உருவாக்கும் பணி சிற்பி, சிவக்குமாரிடம் ஒப்ப்டைக்கப்பட்டுள்ளது. அவர் தெரிவித்த தகவல்:

“25 ஆண்டுகளாக சிலை வடிவமைத்து வருகிறேன். நடிகர்கள் ராஜ்குமார், விஷ்ணுவர்த்தன் ஆகியோருக்கு சிலை செய்துள்ளேன். எஸ்.பி.பாலசுப்பிரமனியத்துக்கு சிலை வடிவமைப்பதை என் வாழ்க்கையின் மைல் கல்லாக நினைக்கிறேன்” என்றார், சிற்பி சிவக்குமார்.

“கர்நாடக மக்கள் எஸ்.பி.பி. மீது மிகுந்த பாசம் வைத்துள்ளனர். அவர் மீண்டும் கர்நாடகாவில் பிறக்க வேண்டும். இன்னும் 6 மாதத்தில் எஸ்.பி.பி. சிலை மைசூரு பல்கலை கழகத்தில் திறக்கப்படும்” என்று ஹம்சலேகா தெரிவித்தார்.

– பா. பாரதி