27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் எஸ்.பி.பி., யேசுதாஸ்!

பிரபல பின்னணி பாடகர்கள் பாலசுப்ரமணியம், யேசுதாஸ் இருவரும் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து பாடலை பாட இருக்கிறார்கள்.

27 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ‘தளபதி’ படத்தில் ‘காட்டுக் குயிலே மனசுக்குள்ளே’ என்ற பாடலை இருவரும் இணைந்து பாடியிருந்தனர். இளையராஜா இசையில் வெளியாகியிருந்த இந்த பாடல் அனைவராலும் ரசிக்கப்பட்டது.

இந்நிலையில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் இணைந்து பாட இருக்கிறார்கள். எம்.ஏ. நவ்சத் இயக்கத்தில் தமிழில் ‘கேணி’, மலையாளத்தில் ‘கிணறு’ என்று உருவாகி வரும் படத்தில் தான் இருவரும் இணைகிறார்கள். இந்தப் பாடலை திரையிசை ஆர்வலர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.