திட்டமிட்டபடி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் : சபாநாயகர் நம்பிக்கை

டில்லி

திட்டமிட்டபடி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.

 

நாடெங்கும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உளது.  ஆயினும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது.  இந்த தாக்கம் வரும் ஜூன் மற்றும் ஜூலை வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.   சென்ற ஆண்டு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 7 வரை நடந்தது.

ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சம் காரணமாக இந்த கூட்டத்தொடர் நடைபெறுமா என்பதில் சந்தேகம் இருந்தது.   ஆயினும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மழைக்காலக் கூட்டத் தொடர் இந்த ஆண்டும் திட்டமிட்டபடி நடைபெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் ஓம் பிர்லா, “கோரொனாவின் தாக்கம் தற்போது அதிக அளவில் உள்ள போதிலும் மழைக்கால கூட்டத்தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என நம்பப்ப்டுகிற்து.  ஆயினும் அந்த நேரத்தில் நிலவும் சூழ்நிலையைப்  பொறுத்து கூட்டம் நடைபெறுவது குறித்து உறுதியான முடிவு எடுக்கப்படும்” என அறிவித்துள்ளார்.