டிடிவி ஆதரவு எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் அதிரடி உத்தரவு!

--

சென்னை,

டிடிவி தரப்பு எம்எல்ஏக்கள் நேரில் வந்து விளக்கம் அளிக்க தமிழக சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வரும் 14ந்தேதி தமிழக சட்டமன்ற அலுவலகம் வந்து நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளார்.

ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இணைந்ததை தொடர்ந்து, டிடிவி தினகரன் தனிமைப்படுத்தப்பட்டார். அவருக்கு ஆதரவான 19 எம்எல்ஏக்கள் கடந்த வாரம் கவர்னரை சந்தித்து, முதல்வர் எடப்பாடியை மாற்ற வேண்டும் என்று கடிதம் கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து அதிமுக கொறடா ராஜேந்திரன் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க கோரி, சபாநாயகர் தனபாலுக்கு பரிந்துரை செய்தார்.

அதைத்தொடர்ந்து சபாநாயகர் டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.

தனபாலைச் சந்தித்து, தங்க தமிழ்ச்செல்வன் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் சிலர் சபாநாயகரை சந்தித்து விளக்கம் அளித்தனர். ஆனால் அவர்களின் விளக்கத்தை ஏற்க மறுத்த சபாநாயகர், தற்போது  அளித்துள்ள விளக்கத்தை, இடைக்கால பதிவாக மட்டுமே கருத முடியும் . ஆகவே மீண்டும் விளக்கம் தேவை நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

அதைத்தொடர்ந்து, தற்போது மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். 19 எம்எல்ஏக்களும் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

வரும் 14ந்தேதி தமிழக சட்டமன்ற அலுவலகம் வந்து நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளார்.

டிடிவி ஆதரவு எம்எல்ஏவான  ஜக்கையன் டிடிவி அணியில் இருந்து விலகி நேற்று சபாநாயகரை சந்தித்து,  எடப்பாடிக்கு ஆதரவு தருவதாக கூறியதை தொடர்ந்து, மற்ற ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரையும் கர்நாடகாவுக்கு கூட்டி சென்று அடைத்து வைத்துள்ளனர் டிடிவி தரப்பினர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், சபாநாயகரின், நேரில் ஆஜராக வேண்டும் என்ற  அதிரடி அறிவிப்பு காரணமாக அதிமுகவில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கூடு வதற்கு முன்பு இவர்களின் பதவிகள் முடக்கி வைக்கப்படும் என கேள்வி எழுந்துள்ளது.