சென்னை:

கருணாநிதி மற்றும் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் பேசிய குறிப்புகளை வைத்தே திமுகவை மடக்கினார் சபாநாயகர் தனபால்.

தங்களுக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏக்களுக்கு கோடிக்கணக்கில் பணம் தருவதாக சசிகலா தரப்பு தெரிவித்ததாக அதிமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ. சரவணன் பேசியதாக வீடியோ வெளியாக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று நேற்று அவைில் திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.

இதற்கு சபாநாயகர் தனபால் மறுத்தார்.

“இது குறித்து இன்று அவையில் பேசிய தனபால், “ 2011ம் ஆண்டு மு.க. ஸ்டாலின்,, “பத்திரிகையில் வரும் செய்திகளை எடுத்து பேசுவது முறையல்ல. அதை வைத்து பேசாதீர்கள்” என இதே அவையில் பதிவு செய்திருக்கிறார்.

அதே போல 1998ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி, “பத்திரிகை செய்தியை வைத்து பேசுவது அழகல்ல..” என்று தெரிவித்திருக்கிறார்.

ஆகவே பத்திரிகை, டிவி செய்திகளை வைத்து புகார் தெரிவிக்காதீர்கள். ஆதாரம் கொடுங்கள். தவிர இந்த விசயம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் இது குறித்து அவையில் பேச வேண்டாம். ஏதேனும் ஆதாரம் இருந்தால் அதை என்னிடம் தாருங்கள் நான் ஆராய்ந்து முடிவை தெரிவிக்கிறேன்” என்று சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.