சபாநாயகர் தீர்ப்பே இறுதியாது! பண்ருட்டி ராமச்சந்திரன்

--

சென்னை,

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மூத்த நிர்வாகியான பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது திமுக மக்களின் குழப்பத்தை விளைவிக்க முயற்சி செய்கிறது என்றும், சபாநாயகர் முடிவே இறுதியான என்றும்ம கூறினார்.

தமிழக சட்டசபையில் கடந்த 18ந்தேதி நடைபெற்ற அமளி காரணமாக திமுகவினர் வெளியேற்றப்பட்டனர். ரகசிய வாக்கெடுப்பு கோரியும், சட்டசபையை தள்ளி வைக்கக் கோரியும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதை யடுத்து சபாநாயகர் , சபை காவலர்கள் மூலம் அவர்களை குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றினார்.

தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற ஜனநாயக படுகொலையை  கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் திமுகவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுகவின் மூத்த தலைவர்களின் ஒருவரான பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது சரியே. சபையில் கோரம் இல்லாமல் இருக்கும்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால்தான்,  அது செல்லாது. நம்பிக்கை வாக்கெடுப்பை பொறுத்தவரை சபாநாயகரின் முடிவே இறுதியானது. இதில் யாரும் குறுக்கிட முடியாது என்று கூறினார்.

மேலும், சபாநாயகர் தனபால் மிகுந்த கண்ணியத்துடன் நடந்துகொண்டார். ஆனால்,  திமுகவினர் நடந்துகொண்ட விதம்தான்  ஜனநாயகத்திற்கு ஆபத்தை விளைப்பதாக இருந்தது. திமுகவினர் தொடரந்து பொய் பிரசாரங்கள் செய்து வருகின்றனர் என்று குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து,  பேரவை நிகழ்வுகள் குறித்து தவறான தகவல்கள் பரபரப்பட்டு வருகிறது. சட்டப்பேரவையில் அமளில் ஈடுபட்டவர்களை சபாநாயகர் வெளியேற்ற சொல்வதுதான் நடைமுறை என்றும்,  சபாநாயகரை கண்டிப்பது சரி.  ஆனால், அவரை தள்ளுவதும், இழுப்பதும் முறையா, இதுதான்  ஜனநாயகமா? என்றார். மக்களிடம் குழப்பம் ஏற்படுத்த திமுக முயல்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.

மேலும்,  சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு கோருவது கட்சித்தாவல் தடை சட்டத்திற்கு எதிரானது கடந்த சில ஆண்டுகளாக ரகசிய வாக்கெடுப்பு முறை நடைமுறையில் இல்லை. சட்டமன்றத்திலும், நாடாளு மன்றத்திலும் ரகசிய வாக்கெடுப்பு சாத்தியமில்லை என்றும்,

உடனடியாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டதால்தான் குதிரை பேரம் தடுக்கப்பட்டது. ஒரு வாரம் கழித்து நடத்தினால் அழுத்தம் இருக்காதா என்றும் கேள்வி எழுப்பினார்.

You may have missed