ஆபாசமாக பேசிய ஹர்பஜன் ஆத்திரமான ராயுடு

0

புனேவில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில், மும்பை இண்டியன்ஸ்- ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் சந்தித்தன. திவாரி அடித்த பந்து, பவுண்டரியை நோக்கி வந்த போது ராயுடு பாய்ந்து சென்று அதை தடுக்க முனைந்தார்.  ஆனால் அந்த பந்து பவுண்டரிக்கு சென்று விட்டது.

இதனால் பந்துவீசிய  ஹர்பஜன் சிங் ஆத்திரமாகி,  ராயுடுவை தகாத வார்த்தைகளால் திட்டியிருக்கிறார். இதனால் ராயுடு ஆவேசமாக,  ராயுடுவை, ஹர்பஜன் சிங் சமாதானப்படுத்த முயற்சி செய்தார். ஆனால் ராயுடு கோபமாக சென்று விட்டார்.

சக அணி வீரர்களே இப்படி முறைத்துக்கொண்டது மைதானத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.