சிறப்புக்கட்டுரை: வெகுஜன மக்களுக்குத் தெரியாத வாழப்பாடியாரின் சர்வதேச அரசியல் முகம்!

வெகுஜன மக்களுக்குத் தெரியாத வாழப்பாடியாரின் சர்வதேச அரசியல் முகம்!

சிறப்புக்கட்டுரை: எம்.பி.திருஞானம்

வாழப்பாடியார் என்று வெகு மக்களால் அன்புடன் அழைக்கப்படும் கே.இராமமூர்த்தி – கூ.இராமமூர்த்தி, பன்முகத் திறமைகளைக்கொண்ட பொறுப்பு வாய்ந்த அரசியல் தலைவர்.

தனது 37வது வயதில் 1977ல் பாராளுமன்றம் நுழைந்த திரு.இராமமூர்த்தி, எதிர்க்கட்சித்தலைவ ரான இந்திரா காந்தியின் பக்கத்தில், பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைமைத் துணைக் கொறடாவாக அமர்ந்து, எதிர்க்கட்சி பாத்திரத்தை வலுவாக வகித்தார்.

இவரது பாராளுமன்ற நடவடிக்கைகள் மெச்சும்படியாக இருந்ததால், தனது தந்தையும், ஜவஹர்லால் நேருவின் கொள்கையான “NON ALLIED POLICY”யான அணி சேரா கொள்கையை உலக நாடுகளில் பரப்பரவும், அணி சேரா நாடுகளின் எண்ணிக்கைகளை உயர்த்தவும் ஒரு அமைப்பு வாழப்பாடி கூ.இராமமூர்த்தி மூலமாக உருவாக்க விரும்பினார்  இந்திராகாந்தி.

இந்திய வெளியுறவுக் கொள்கையில், பாண்டியத்யம் பெற்றி ஜி.பார்த்தசாரதி உள்ளிட்ட அறிஞர்களை கலந்து ஆலோசித்து  INDIAN INSTITUTE FOR NON-ALIGNED STUDIES என்ற அமைப்பை உருவாக்குமாறு வாழப்பாடி கூ.இராமமூர்த்திக்கு கட்டளையிட்டார், இந்திரா காந்தி. IINS என்ற அமைப்ப உடடினயாக சர்வதேச தரத்தில் 1980ம் ஆண்டு உருவாக்கினார் வாழப்பாடியார்.

அணிசேரா  காக்க இந்திய ஆராய்ச்சி நிறுவனமான IINS அமைப்பினர் நிறுவனர் மற்றும்  பெருந்தலைவராக வாழப்பாடி கூ.இராமமூர்த்தி தனது இறுதிக்காலம் வரை பொறுப்பு வகித்து ‘NAM’ அமைப்பின் உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை உயர்த்த மூன்று முறை உலகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு. 40க்கும் மேலான நாடுகளுக்கும், 120க்கும் மேலாக கருத்தரங்குகள், பொதுக்கூட்டங்கள், வட்டமேஜை விவாதங்கள் நடத்தினார்.

தலைநகர் டில்லியில் IINS சார்பில் 1980ம் ஆண்டு நவம்பர் முதல் மேற்கொள்ளப்பட்ட அணிசேரா தத்துவத்தை பரப்பிய  நடவடிக்கைகளின் சுருக்கம்:

1980ம் ஆண்டு முதல் அணிசேரா இயக்க இந்திய ஆராய்ச்சி நிறுவனம் பலவிதமான பொது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அவற்றில் இந்த நிறுவனத்தின் தலைவர் என்ற முறையில் வாழப்பாடியார் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார்.

பேராசிரியர் எம்.எல்.நாகரின் ‘பழைய நகரங்கள்’ எனும் தலைப்பில் 1980ம் ஆண்டு நவம்பரில் ஓவியக் கண்காட்சி நடத்தப்பட்டது. மத்திய அமைச்சர் யோகேந்திர மக்வானா கண்காட்சியை திறந்து வைத்தார்.

1981ம் ஆண்டு ஜனவரி 11ந்தேதி ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. ‘அணிசேரா இயக்கமும்… இன்றைய சர்வதேச சூழலும்’ என்ற தலைப்பில் திருமதி. ராஜேந்திரகுமாரி பாஜ்பாய், டி.எம்.கவுல் ஆகியோர் பேசினர்.

1981ம் ஆண்டு பிப்ரவரி 6ந்தேதி ‘புதிய சர்வதேச ஏற்பாடும், அணி சேரா இயக்கமும்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கங்களில் அப்போதைய நிதி அமைச்சர் ஆர்.வெங்கட்ராமன், என்.டி.திவாரி, பேராசிரியர் மிஸ்ரா, ஐ.கே.குஜ்ரால் மற்றும் பலர் முக்கிய பேச்சாளர்களாக கலந்துகொண்டனர்.

1981ம் ஆண்டு மே 5ந்தேதி,  ‘இன்றைய காலத்தின் அணிசேரா இயக்கத்தின் முன் உள்ள சவால்கள்’ என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்த கருத்து மேடையில் மத்திய அமைச்சர் சி.பி.என்.சிங், ஆர்.டி.சாத்தே, கே.கே.பார்கவா, எஸ்.எஸ்.மகாபாத்ரா எம்பி. ஆகியோர் உரை யாற்றினர்.

1981ம் ஆண்டு ஜூலை 16ந்தேதி ‘புதிய சர்வதேச தகவல் முறைமை’ என்ற தலைப்பில்  கருத்தரங் கம் நடைபெற்றது. இதில், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் வசந்த் சாத்தே, இந்தியா விலுள்ள கியூபா நாட்டுத்தூர் ஜே.எஸ்.பெரஸ் நோவா, மணிசங்கர அய்யர் உள்பட பலர் பேசினர்.

மேற்கண்ட 4 கருத்தரங்குகளிலும் வாழப்பாடி கூ.ராமமூர்த்தி கலந்துகொண்டு கருத்தாழமிக்க உரை நிகழ்த்தினார்.  அவர்களுடன் துரை செபாஸ்டியன், ஸ்ரீவத்சவா ஆகியோரும் கருத்துரைத்த னர்.

உலகளாவிய ஆயுதப்போட்டியும், மூன்றாம் உலகமும் என்ற தலைப்பில், 1982ம் ஆண்டு ஜனவரி 28ந்தேதி ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், அணிசேரா இயக்கத்தை வளர்ப்பதிலும், வலுப்படுத்துவதிலும் நேரு, டிட்டோ, நாசரின் பங்களிப்பும், பாத்திரமும் என்ற தலைபில் நடை பெற்ற கருத்தரங்கிலும் வாழப்பாடியார் கலந்துகொண்டு வளம் செறிந்த கருத்துக்களை எடுத்துச் சொன்னார். மத்திய அமைச்சர்களும், பல்வேறு அறிஞர்களும் இவற்றில் கலந்து கொண்டு பேசினர்.

1983ம் ஆண்டு ஜனவரி 27ந்தேதி, ‘அணி சேரா நாடுகளின் ஏழாவது மாநாட்டின் முன்னுள்ள பணிகள்’  என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து 1983ம் ஆண்டு ஏப்ரல் 28ந்தேதி  மற்றொரு கருத்தரங்கு ஏற்பாடு செய்யப் பட்டது. அதில், திருமதி இந்திராகாந்தியின் தலைமையின்கீழ், ‘அணிசேரா இயக்கத்தில் இந்தியாவின் பங்கு’ என்ற தலைப்பில் மத்திய அமைச்சர் கே.பி.சிங், டியோ, கே.பி.மிஸ்ரா, மணிசங்கர் அய்யர், ஸ்ரீவத்சவா மற்றும் வாழப்பாடி ராமமூர்த்தி எம்.பி. ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

1984ம் ஆண்டு மார்ச் 9ந்தேதி ‘அணிசேரா இயக்கத்தில் இந்தியாவின் தலைமை’ என்பது குறித்து வட்டமேஜை கூட்டம் நடைபெற்றது. இதில் சத்துலால் சந்த்ராகர் எம்.பி., கே.சுப்பிரமணியன், ஏ.கே.தாமோதரன், துரை செபாஸ்டியான் ஆகியோர் பேசினர்.

இந்த வட்ட மேஜைக் கூட்டத்தில் கே.ராமமூர்த்தி எம்.பி. உரையாற்றினார். பின்னர் அதே ஆண்டு ஜூன் 15ந்தேதி திருமதி இந்திரா காந்தி மற்றும் பிற உலக தலைவர்களின் 4 கண்டம் சார்பான ‘சமாதான முன்முயற்சியும், அணுஆயுத அச்சுறுத்தலும்’ எனும் தலைப்பில் நடைபெற்ற கூட்ட மொன்றில் மத்திய அமைச்சர்கள் கல்பனாத் ராய், குலாம்நபி ஆசாத், சங்கர் தயாள் சர்மா, சி.பி.ஷைலானி எம்.பி., இரா.அன்பரசு எம்.பி., ஸ்ரீவத்சவாஆகியோர் உரை நிகழ்த்தினர்.

1984ம் ஆண்டு செப்டம்பர் 1ந்தேதி இந்தியத் தலைமையின் கீழ் அணிசேரா இயக்கம் எனும் கருத்தரங்கில் வாழப்பாடி கே.ராமமூர்த்தி எம்.பி. உள்பட பல முக்கிய பிரமுகர்கள் உரையாற்றி னர். அணி சேரா இயக்கத்துக்கு இந்தியா தலைமையேற்ற 2ம் வருட  கொண்டாட்டமாக 1985ம் ஆண்டு மார்ச் 12ந்தேதி, ‘அணிசேரா இயக்கமும், அணுஆயுதக் கலைப்பும்’ என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் வி.என்.காட்கில், கே.பி.சிங் டியோ, கே.நட்வர்சிங், ராஜ்யசபா துணைத்தலைவர் நஜ்மா ஹெப்துல்லா, ரமேஷ் பண்டாரி, இந்தியா விலுள்ள அல்ஜிரியா தூதர் ஆப்தெர்ராமனே மற்றும் வாழப்பாடியார் ஆகியோர் விவாதத்தில் கலந்து கொண்டனர்.

‘உடனடி அணுஆயுத முடக்கம்’ என்னும் தலைப்பில், 1985ம் ஆண்டு மே 22ந்தேதி நடைபெற்ற கருத்தரங்கின் இறுதியில், ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய அமைச்சர் ராம்நிவாஸ் மிர்தா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினர்.

‘அணுஆயுத யுகத்தில், படைபலக் குறைப்பு, உயிர் வாழ்தல், சக வாழ்வு’ என்பது பற்றிய கருத்தரங்கம், 1985ம் ஆண்டு டிசம்பர் 2ந்தேதி ஏற்பாடு சய்யப்பட்டது. இதில் மத்திய அமைச்சர் கே.நட்வர்சிங், கே.ராமமூர்த்தி எம்.பி. மற்றும் பலர் பேசினர்.

இக்கருத்தரங்கில், பங்கு கொண்டவர்கள் சார்பாக, சோவியத் ஜனாதிபதி மிகையீல் கோர்ப்ப சேவ், அமெரிக்க அதிபர் ரீகன், இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி ஆகியோருக்கு கடிதம் எழுதப் பட்டது. அக்கடிதத்தில் அணுஆயுத குறைப்புக்கு இம்மூன்று தலைவர்களும் முன்முயற்சி எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

1986ம் ஆண்டு மார்ச் 13ந்தேதி அன்று சமாதானம் மற்றும் படைபலக் குறைப்புக்கான அணி சேரா இயக்கப் போராட்டமும் என்ற கருத்தரங்கிற்கு அப்போதைய துணை ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமனும், பிரதமர் ராஜீவ்காந்தியும் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தனர்.

1986ம் ஆண்டு டிசம்பர் 22ல் ராஜீவ்காந்தி, மிகையீல் கோர்ப்பசேவ் உச்சி மாநாடு ‘பரிமாணங் களும், எதிர்பார்ப்புகளும்’  என்னும் தலைப்பில் ஒரு வட்ட மேஜை விவாதம் நடைபெற்றது. இவ்விரு நிகழ்ச்சிகளிலும் வாழப்பாடியார் கலந்துகொண்டு சிறப்பித்தார். இக்கூட்டங் களுக்கு பத்திரிகையாளர்களும், அரசியல் பிரமுகர்களும் கல்வியாளர்களும் அரசியல் பிரமுகர்களும் அதிக எண்ணிக்கையில் வந்திருந்தனர்.

அணி சேரா இயக்கத்தின் 25வது ஆண்டு விழா கொண்டாட்டத்தையொட்டி 300நாள்  சர்வதேச கருத்தரங்கம் 1986ம் ஆண்டு ஆகஸ்டு 1ந்தேதி முதல் 3ந்தேதி வரை நடைபெற்றது. பிரதமர் ராஜீவ்காந்தி உள்பட  பிற நாட்டு தலைவர்களும் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தனர்.

இந்த சர்வதேச கருத்தரங்கத்தை இந்திய துணை ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் தொடங்கி வைத்தார். இதில்  40 நாடுகளை சேர்ந்த 200 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். பேராசியர் கே.பி.மிஸ்ரா, லோக்சபா சபாநாயகர் பல்ராம் ஜாக்கர், வாழப்பாடி ராமமூர்த்தி எம்.பி. உள்பட பலர் பரையாற்றினார். இக்கருத்தரங்கில் 54 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டடன. 21 அறிஞர்களும், அமைச்சர்களும், எம்.பிக்களும் கலந்துகொண்டு பேசினார். ரெய்க்ஜாவிக் என்ற இடத்தில் அமரிக்க அதிபர் ரீகனும், சோவியத் அதிபர் கோர்ப்பசேவும் சந்தித்து பேசினர்.  அப்புறம் என்ன என்பது குறித்து 1987ம் ஆண்டு ஜனவரி 29ல் நடைபெற்ற விவாத அரங்கத்தில் கே.ராமமூர்த்தி எம்.பி. கலந்துகொண்டார்.

1987ம் ஆண்டு ஏப்ரல் 18ந்தேதி, ‘ஏழாண்டு ஈராக் போர், அணிசேரா இயக்கத்தின் முன் உள்ள சவால்’ என்ற தலைபிப்ல கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் இந்தியாவிலுள்ள வெளிநாட்டு தூதர்கள் உள்பட 200 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்,.

பின்னர் அணி சேரா இயக்கத்தின் 26வது ஆண்டும், இந்திய சுதந்திர தினத்தின் 40வது ஆண்டு விழாவையொட்டி ஆகஸ்டு 7ந்தேதி முதல் 9ந்தேதி வரை அணிசேரா இயக்கமும், உலக சமாதான மும் என்ற சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது. இதை ராஜீவ்காந்தி தொடங்கி வைத்தார்.

1987ம் ஆண்டு ஆகஸ்டு 20ந்தேதி இந்தியாவை பற்றி மிகையீல் கோர்ப்பசேவ், அணி சேரா இயக்கமும், உலக சமாதானமும் எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதன் நூலாசிரியர் டாக்டர் ஜி.என்.வத்சவா.

இனபாகுபாடு மற்றும் போரில்லாத உலகம் காண்பது குறித்த விவாத அரங்கம் – ஆப்பிரிக்க ஒற்றுமை ஸ்தாபனத்தின் 25வது ஆண்டு விழா 1988ம் ஆண்டு  ஆகஸ்டு 19ந்தேதி முதல் 21ந்தேதி வரை நடைபெற்றது.

ஆப்கானிஸ்தான் பிரச்சினை பற்றிய கருத்தரங்கம் 1989ம் ஆண்டு ஜனவரி 27, 18ந்தேதி நடை பெற்றது.

2010ம் ஆண்டுகளுக்குள் ஆணுஆயுதங்களை ஒழிப்பது பற்றிய தேசிய விவாதம் (18-03-1989)

சர்வதேச உறவுகளில் அணி சேராமை எனும் தலைப்பில் மாநாடு நேருவின் பிறந்தநாளை யொட்டி நடைபெற்றது. இந்த 3 நாள் மாநாட்டில் எட்டு கூட்டத்தொடர்கள் இருந்தன (1989- ஆண்டு ஜூலை 28 முதல் 30 வரை)

ஆப்கானிஸ்தானில் சமாதான எதிர்பார்ப்புகள் பற்றிய இரண்டு நாள் வட்ட மேஜை மாநாடு பல்கலைக்கழகங்களுடன் சேர்ந்து நடத்தப்பட்டது. (1989ம் ஆண்டு ஆகஸ்டு 19, 20)

“பாலஸ்தீனர்களின் மனித உரிமைகள்” பற்றிய கருத்தரங்கம் (9-12-1989)

அணிசேரா இயக்க 8வது மாநாடு: ‘தேர்வு செய்யப்பட்ட ஆவனங்கள்’ மற்றும் இந்தியாவின் தலைமையின் கீழ் அணி சேரா இயக்கம் ஆகிய 2 நூல்களை வெளியுறவுத்துறை அமைச்சர் என்.டி.திவாரி வெளியிட்டார் (8-12-1989)

இந்திய வெளிநாட்டுக்கொள்கை: சமாதானம், பாதுகாப்பு மற்றும் தெற்காசிய ஒத்துழைப்பு எனும் தலைப்பில் இருதின தேசிய உரையாடல் நடைபெற்றது (15-16 ஜூன் 1990)

சோவியல் கம்யூனிஸ்ட் கட்சியின் 28வது பேராயமும், இன்றைய உலகில் அதன் தாக்கமும் என்பது பறி, இரு நாள் வட்ட மேஜை விவாதம் (24-25 ஆகஸ்டு 1990)

மாறி வரும் உலக எதார்த்தங்கள்: அணிசேரா இயக்கத்தின் முன்னுள்ள முன்னுரிமைகள் –இககூட்டம் இந்தியா,  யூகோஸ்லாவியா,  கானா ஆகிய மூன்று நாடுகளின் கூட்டுக்கூட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டது.

வகுப்புவாதத்திற்கு எதிரான ஒற்றுமை என்னும் தேசிய கருத்தரங்கம் (9-1-91) அன்று நடைபெற்றது.

அரசியல் ஸ்திரமின்மையும் இந்தியாவின் வெளிநாட்டு கொள்கையும் – இரண்டு நாள் வட்டமேஜை விவாதம் 19-04-91 அன்று நடைபெற்றது.

மாறிவரும் உலகில் அணிசேரா இயக்கத்தின் பங்கு பற்றிய இருநாள் வட்ட மேஜை விவாதம் (27, 18 ஆகஸ்டு 91). மறைந்த பாரதபிரதமர் திருமதி இந்திராகாந்தியின் 75வது பிறந்தநாளையொட்டி, சர்வதேச வட்டமேஜை மாநாடு 1992ம் ஆண்டு நவம்பர் 18ந்தேதி முதல் 20ந்தேதி வரை நடை பெற்றது.

வன்முறை ஒழிந்தால்தான் அமைதி நிலவ முடியும், மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகிய 3 தலைவர்களையும் பயங்கரவாதம் பலிவாங்கி விட்டது  அணி சேரா இயக்க லட்சியம் நிறைவேறவும், சர்வதேச ஒத்துழைப்புக்காகவும், உலக சமாதானத்துக்காவும், மக்களின் கருத்தைத் திரட்டி வரும் இந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் மூன்று நாள், வட்ட மேஜை மாநாட்டின் கருப்பொருளை அறிமுகப்படுத்தி, கே.ராமமூர்த்தி எம்.பி. உரையாற்றினார். இதில் 29 வெளிநாட்டு பிரதிநிதிகளும்,130 இந்திய பிரிதிநிதிகளும்  பங்குகொண்டனடர்.  இந்த மாநாட்டின் உரை பின்னர் மலர் வடிவில் வெளியிடப்பட்டது.

புதுடில்லியில் ஒரு புதுமை நிறுவனம்

அணிசேரா இயக்க இந்திய ஆய்வு நிறுவனத்துக்கு (Indian Institute for Non-Aligned Studies) விருந்தினர் அந்தஸ்து (Guest member) கிடைத்திருப்பதால், அது 1980ம் ஆண்டு புதுடில்லியில் தோற்று விக்கப் பட்டதில் இருந்து தொடர்ந்து அணி சேரா இயக்க மாநாடுகளில் பங்குபெற்று வருகிறது. இதன் நிறுவனரும், தலைவருமான  வாழப்பாடி ராமமூர்த்தி இருந்து வந்தது தமிழகத்திற்கு பெருமை தேடித்தருவதாக அமைந்தது.

1983ம் ஆண்டு அணிசேரா இயக்கத்தின் 7வது மாநாடு டில்லியில் நடைபெற்றது. முந்தைய நாடுகளைவிட அதிக அளவில் உறுப்பினர் நாடுகள் கலந்துகொண்ட அந்த மாநாட்டில்தான், இந்திரா காந்தி அம்மையார் அணிசேரா இயக்கத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார். இந்த மாநாட்டுக்கு முன்னும், பின்னும் குறிப்பிடத்தங்க பங்காற்றியுள்ளது இந்த ஆய்வு நிறுவனம்.

அணிசேரா நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்களின் லட்சியக் குரலை எழுப்பும் உயர்மேடையாக திகழ்ந்து வருகிறது இந்த ஆய்வு நிறுவனம். 21ம் ஆண்டு நூற்றாண்டை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கும் வேளையில், சுரண்டல் மற்றும் மேலாதிக்க பேராசையையும் அடியோடு அகற்றுவது காலத்தின் கட்டாயம் ஆகிறது. எதிர்கால தலைமுறையினரை அச்சத் திலும், அவ நம்பிக்கையிலும், வறுமையிலும் விட்டுவிட முடியுமா? பரஸ்பர பகைமையும், பாதுகாப்பு இன்மையும் இல்லாத புதிய உலகத்தை அவர்களக்கு ஏற்படுத்திக் கொடுப்பது நமது தலைமுறையின் கடமை அல்லவா. இந்த விழுமிய நோக்கங்களை எய்துவதற்காக அவர்களுக்கு உலக நிலைமைகள் பற்றிய சரியான தகவல்களையும், அறிவாற்றலையும் வழங்குகிற அரிய பணியிலே தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளது இந்த ஆய்வு நிறுவனம்.

1961ம் ஆண்டு பெல்கிரேட் பிரகடனத்தில் வேரூன்றியுள்ள அணிசேரா இயக்க கோட்பாடுகள் காலத்திற்கேற்ப இடையறாது வளர்ந்து வலுப்பெற்று வந்துள்ளது. நமது காலத்தின் புதிய போக்குகளையும் ஆர்வங்களையும் அணிசேரா இயக்கம் நன்கு பிரதிபலிக்கிறது. அணிசேரா இயக்கத்தின் தந்தை ஜவஹர்லால் நேருவின் இதயச் சோலையில் மலர்ந்த லட்சியக் கருத்து, மலர்களில் இனிய மணத்தை சுமந்து செல்லும் தென்றலாக இந்த ஆய்வு நிறுவனம் இடையறாது செயல்பட்டு வருகிறது.

ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளிடம் மிகப்பெரிய அளவுக்கு விழிப்புணர்வை அணிசேரா இயக்கம் ஏற்படுத்தி உள்ளது. அந்த விழிப்புணர்வின் மூலம் அணிசேரா இயக்கத்தின் முக்கிய பாத்திரத்தைப் புரிந்துகொள்ளலாம்… பல சர்வதேச விவகாரங்களில் அது குறிப்பிடத்தக்க பெரும் பங்காற்றியுள்ளது.

உலக அரசியல் சூழல் இப்போது  முற்றிலுமாக குறிப்பிடத்தக்க அளவில் மாறிப் போய் உள்ளது. அமெரிக்க – சோவியத் கெடுபிடிப் போர் மறைந்த விட்டது. சோவியத் யூனியன் சிதறி விட்டது, கிழக்கு ஐரோப்பிய சோசலிச முகாம் வீழ்ச்சி அடைந்து விட்டது. பாலஸ்தீன பிரச்சினை உள்பட உலக அரங்கில் முட்டி மோதிக் கொண்டிருந்த பல தகராறுகள் பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்வு காணப்படும் ஆக்கப்பூர்வமான சூழல் ஏற்பட்டுள்ளது.

உலகப்பொருளாதார நிலவரமானது முன்பைவிட இப்போது பரபஸ்பரம் ஒருங்கிணைப்பும், சார்பும் மிகுந்ததாக மாறி உள்ளது. சமத்துவம் சகோதரத்துவம், பரஸ்பர ஒத்துழைப்பு, தலையிடாமை போன்ற உயரிய கண்ணோட் டங்களின் அடிப்படையில், புதிய உலக முறைமையை தோற்றுவிக்கும் கடமை அணிசேரா இயக்கத்திற்கு உள்ளது.

அணிசேரா இயக்கம் ஆற்றியுள்ள பணியை உலகின் சமாதான சக்திகள் ஒருபோதும் மறக்கவே முடியாது. அணி சேரா இயக்கத்தை உருவாக்கியவர்கள் ஒரு தொலைநோக்கு பார்வையுடன் அதனை உருவாக்கினார்கள். அதே பார்வையோடு இந்த இயக்கத்தை வளர்க்கவும், வலுப்படுத்த வும் 1980ம் ஆண்டு செப்டம்பர் 19ச்தேதி அணிசேரா இயக்க இந்திய ஆய்வு நிறுவனம் பிறந்தது.

அணிசேரா இயக்கத்தின் பல்வேறு அம்சங்களை, பிரச்சினைகளை, போக்குகளை இந்த நிறு வனம் ஆராய்ந்து வருகிறது. அணிசேரா நாடுகளுக்கிடையே ஒருங்கிணைப்பாளராக இந்நிறு வனம் செயல்பட்டு வருகிறது. அணிசேரா இயக்கத்தின் பல அம்சங்களை விளக்கி பல நூல்களை இந்த ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதுவரை சுமார் 40க்கும் மேற்பட்டநூல்கள் வெளி யிடப்பட்டு உள்ளன. அணிசேரா இயக்கத்தின் லட்சியங்களை, நோக்கங்களை மக்களிடம் எடுத்துரைப்பதற்காக, நன்கு பிரசாரம் செய்வதற்காக படிப்பாராய்ச்சியாளர்கள் பலரும் இந்த ஆய்வு நிறுவனம் பயிற்சி அளிக்கிறது. உலக நாடுகளை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், பத்தி ரிகையாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமூக சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள், ராஜ தந்திரிகள், இந்த இந்திய ஆராயச்சி நிறுவனத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.  பல்வேறு நடவடிக்கைகள் மூலம் பல தரப்பினரிடும் அணிசேரா இயக்கம் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச அளவில் எழும் பிரச்சினைகளை ஆய்வு பொருளாக்கி சர்வதேச கருத்தரங்குகள் மூலம் இடையறாதுஇந்த நிறுவனம் விவாதித்து வந்துள்ள அணிசேரா நாடுகள் மற்றும் வளர்ந்து வரும் நாடுகளின் முன்னர் எழுந்துள்ள பரபரப்பான பிரச்சினைகள் குறித்தும், அதுகுறித்து உலக மக்களின் கருத்தைத் திரட்டவும், அதன் மூலம் மக்களின் பிரச்சினையை தீர்ப்பிதில் கணிசமான செல்வாக்கு செலுத்துவதிலும் இந்த ஆய்வு நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது. சர்வதேச உறவுகளில் ஜனநாயகத்தன்மை ஏற்பட வேண்டுமெனவும் இந்நிறுவனம் விரும்புகிறது.

வளர்ச்சி நோக்கங்களுக்காக தகவல்களையும், மூலாதாரங்களையும் பகிர்ந்து கெள்ளும் விஷயத்தில் வளர்ந்து வரும் நாடுகளுக்கு மத்தியில், அதிக அளவில் ஒத்துழைப்பு நிலவ வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது. இம்மாதிரி சூழலில் அணிசேரா இயக்கத்தின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது. ஆய்வு நிறுவனத்தின் கடமையும் அதிகரிக்கிறது.

கார்ட்டூன் கேலரி