கொலையில் ஏதடா சாதி! சிறப்புக்கட்டுரை

கொலையில் ஏதடா சாதி! சிறப்புக்கட்டுரை:

உயர்நீதின்ற வழக்குரைஞர் வி.எஸ்.கோபு

(கருத்து முழுமையும் கட்டுரையாளருடையது. மாற்றுக்கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.)

கடன் வாங்கிய மூளை, கடன்வாங்கிய உடைகள், கடனில்லா கடன்கள், இந்த மூலதனத்தோடு, சிறு உழைப்பு, இது இருந்தால் போதும் வாழ்விலும் உயரலாம், சாதியையும் ஒழிக்கலாம்.

இதுவே, இன்றைய தலித்திய இளைஞர்களுக்கு, போலி சமூக சீர்திருத்த, போலி போராளி வர்க்க, முற்போக்கு பதர்கள் காட்டும் வழி.

காரைக்கால் வினோதினி, சூளைமேடு சுவாதி, சேலம் விஷ்ணுப்பிரியா, கரூர் சோனாலி, சிறுகடம்பூர் நந்தினி, தூத்துக்குடி புனிதா, போரூர் ஹாசினி, திருமங்கலம் சித்ராதேவி, சாலியமங்களம் கலைச்செல்வி, தூத்துக்குடி ஆசிரியை பிரான்சினா, வெள்ளம்புதூர் ஆராயி, வேளச்சேரி இந்துஜா, கே.கே.நகர் அஸ்வினி, விழுப்புரம் நவீனா, திருச்சி மோனிஷா, கோவை தன்யா, தற்போது தக்கலை மெர்சி. இவர்களெல்லாம் யார் தெரியுமா?

காதலித்து விலகிய, அல்லது காதலிக்க மறுத்து, காதல் என்ற போர்வையால், வாழத்தகுதியற்ற மனித மிருகங்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டவர்கள்.

இவர்களின் கொலையை பிற தலைவர்கள், பொதுவான மனித தன்மையோடு கண்டிக்கும்போது, ஒரு சிலர், ஒரு சில கொலைகளுக்கு மட்டும் ஒரேயடியாக பொங்குவதும், ஒருசில கொலைகளை கண்டு ஏதும் தெரியாதவர்கள் போல் அமைதியாக இருப்பதும் தொடர்கதையாக உள்ளது. இதற்கு காரணம் கொலையில் சாதி பார்ப்பதே! இறந்த பெண் பிற சமூகமாக இருந்து கொலைகாரன் தலித்தாக இருந்தால் இவர்கள் பார்வையில் அது பிணம். இதற்கு இவர்கள் போராட மாட்டார்கள். ஒரு கோடி இழப்பீடு கேட்க மாட்டார்கள். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கேட்க மாட்டார்கள்.

இறந்த பெண்ணும், கொலைகாரனும் தலித்தாகவே இருந்தால், அச்சமயம் இவர்களது ஐம்புலன்களும் மரணித்துவிடும். அதுவே இறந்த பெண் தலித்தாக இருந்து, கொலைகாரன் பிற சமூகமாக இருந்தால், அந்த கொலைக்கு இவர்கள் வைத்த பெயர், ஆதிக்க சாதிவெறி கொலை. அதுபோல, இறந்த ஆண் தலித்தாக இருந்தால், அந்த கொலைக்கு இவர்கள் வைத்த பெயர், சாதிவெறியர்களின் ஆணவக் கொலை.

இதற்கு போராடுவார்கள் பாருங்கள். ஒருகோடி இழப்பீடு, இறந்தவர் குடும்பத்தில், ஒருவருக்கு அரசு வேலை. அவர்கள் சொல்லும் டாக்டரை வைத்துதான், பிரேத பரிசோதனை, அவர்கள் சொல்லும் கேமராமேனை வைத்தே அதை வீடியோ எடுக்கவேண்டும். அவர்கள் குறிப்பிடும் நீதிபதியே, அந்த வழக்கு விசாரனையை நடத்தவேண்டும் என்பார்கள்.

சரி இவர்களெல்லாம் யாரென்று பார்த்தால், ஒன்று, அந்த அப்பாவி மக்களிடம் வசூலித்து வயிறு வளர்ப்பவர்களாக இருக்கிறார்கள். அல்லது அந்த அப்பாவி தலித் மக்களை வெறும் ஓட்டுக்களாக பார்க்கும் அதிமேதாவிகளாக இருக்கிறார்கள்.

இவர்களது வேலை. தலித் சமூகத்தில், அரசு வேலைகளில் உள்ளவர்களிடமும், தலித் மக்கள் வாக்கை வாங்க நாக்கை தொங்கப்போட்டிருக்கும் ஓட்டு பொறிக்கிகளிடமும் பணம் வசூலித்து, மண்டபம் ஏற்பாடு செய்து, அப்பாவி தலித் இளைஞர்களை கூட்டி கூட்டம் போட்டு, மேடையில் இதற்கு முன் மாற்று சமூக பெண்களை கலப்பு திருமணம் செய்த அற்புதவான்களை அமர்த்தி, அவர்களின் கலப்பு திருமணத்திற்கு பிறகான வாழ்க்கையின் அருமைபெருமைகளை சொல்லி, அவர்கள் மூலம் அந்த இளைஞர்களுக்கு சாதியை, கலப்பு திருமணத்தின் மூலமே ஒழிக்க முடியும் என முட்டாள் தனமாக மூளைச்சலவை செய்வதுதான்.

அங்கு இவர்கள் சொல்லிக்கொடுப்பது.

1) மாற்று சமூக வசதி படைத்த பெண்ணை காதலி.

2)உன் காதலுக்கு தூதுவர்களாக உன் சமூக பெண்களை பயன்படுத்திக்கொள்.

3)உனக்கு தேவையான உடைகளை எங்களிடம் பெற்றுக்கொள். வாகன உதவிக்கு நண்பர்களிடம் கேட்டுக்கொள்.

4)பள்ளிக்கு செல்லும்போதும், வரும்போதும் பின் தொடர்ந்து செல்.  எச்சில் துப்பினாலும் துடைத்துக்கொள். அது உன் சமூக முன்னேற்றத்திற்கு என நினைத்துக்கொள்.

5)காதலி குடும்பத்தால் பிரச்சனை என்றால் பயப்படாதே, வன்கொடுமை தடுப்பு சட்டம் நமக்காகவே இருக்கிறது.

6) காதலில் வெற்றி பெற்றால் பதிவுசெய்து கொடுக்க வழக்கறிஞர் குழுவே இருக்கிறது.

7) இந்த ஆயிரம் ரூபாய் உனக்கு, அடுத்த கூட்டத்திற்கு, அதிக இளைஞர்களை கூட்டிவந்தால், அவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் இருக்கிறது.

இப்படி செய்தால் சாதி வளருமா? அழியுமா? இப்பேர்ப்பட்ட தியாகிகளால் கலப்பு திருமணம் நடந்திருக்கிறதே தவிர, ஒரு சாதியாவது இதுவரை ஒழிந்திருக்கிறதா என்றால் அது கேள்விக்குறியே.

இவர்களின் மாமா வேலைக்கு, பிற சமூக பெண்கள் மட்டுமே தேவைப்படுகிறது. காதலும், காமமும் கூட பிற சமூக பெண்களிடம் மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும் என்பது இவர்களது பிரதான கொள்கை. இவர்கள் கள்ளக்காதலின் அங்கிகரிப்பாளர்கள். யாரும் யாரோடும் உறவாடுவதை முழுமனதோடு ஏற்றுக்கொள்பவர்கள்.

இவர்களின் தூண்டுதலால், அந்த பெண், அவ்விளைஞனை காதலித்தால், திருமணத்திற்கு பிறகு, அப்பெண்ணின் குடும்பத்தாரிடம் சொத்தை எழுதி கேட்பது. காதலிக்கவில்லையென்றால், எண்ணம் ஈடேறாத ஆத்திரத்தில் கொடூரமாக, காதலித்த பெண்ணையே கொலை செய்வது. பிறகு கூண்டில் குற்றவாளியாக நின்று, தன்னுடைய வாழ்வையே, சில தருணங்களில் உயிரையே இழப்பது, அப்பாவி தலித் இளைஞர்களின் தொடர்கதையாகவே உள்ளது.

இந்த தூண்டுதலை தொடர்ந்து ஒரு வேலையாக செய்யும் இயக்கங்களை, அரசு முளையிலேயே கிள்ளி எறியாமல் விட்டதின் விளைவே, இத்தகைய கொலைகள் தொடர காரணமாக உள்ளது. பிற சமூக இளைஞர்கள் மத்தியில், தலித்திய இளைஞர்கள் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்துகிறது.

தன்னை தலித் மக்களின் பாதுகாவலராக காட்டிக்கொள்ளும் ஒரு தலைவராவது, அந்த இளைஞர்களுக்கு நல்ல வழி காட்டக்கூடாதா? அரசு இலவசமாக படிக்க உதவுகிறது. தங்கி படிக்க விடுதி வசதி தருகிறது. வேலை வாய்ப்பில் முன்னுரிமை தருகிறது. அதை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறுங்கள். அதுபற்றிய உதவி தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் என எந்த தலித்திய தலைவர்களாவது அறிவுரை சொல்லலாமே! சொன்னார்களா?

அதைவிடுத்து காலா படமெடுத்து தலித்திய ஹீரோயிசம் காட்டுவதும், பரியேறும் பெருமாள் எடுத்து, சாதிய வன்மத்தை தூண்டுவதும் சாதியம் ஒழித்திடுமா? மாறாக வளர்ந்திடுமே!

இனியாவது சமூக அக்கறையுடன் செயல்படுவார்களா தலித்திய தலைவர்கள்.

 

வழக்கறிஞர் V S கோபு

உயர்நீதிமன்றம்
சென்னை

You may have missed