சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டுங்கள்…கவர்னருக்கு அட்டர்னி ஜெனரல் ஆலோசனை

--

சென்னை:

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பம் தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக ஆட்சி நீடிக்குமா? அல்லது கலைக்கப்படுமா? என்ற விவாதங்கள் சென்று கொண்டிருக்கிறது.

இது தொடர்பாக சட்ட நிபுணர்கள் ஆளாளுக்கு ஒரு கருத்தை கூறி வருகின்றனர். இது மக்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. கவர்னரும் தனது முடிவை அறிவிக்க காலதாமதம் ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி கவர்னருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதில், ‘‘பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில், தமிழகத்தில் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டலாம். தற்போதைய சூழலில் இதுவே தீர்வாகும். பெரும்பான்மையை நிரூபிக்க இருவரையும் அழைக்கலாம்’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.