உறுப்பினர்களுக்கான சிறப்பு பேருந்து (பழைய படம்)

சென்னை

சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு சென்ற ஒரு பேருந்தில் இரு உறுப்பினர் மட்டுமே பயணம் செய்துள்ளனர்.

சென்னை சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் இருந்து சுமார் 2 கிமீ தொலைவில் சட்டப் பேரவை அமைந்துள்ளது.    சட்டப் பேரவை நடைபெறும் தினங்களுக்கு  உறுப்பினர்களுக்கு பயணப்படி வழங்கப்படுகிறது.   அது தவிர பலரிடமும் கார் வசதி உள்ளது.    இருப்பினும் அவர்களுக்கு  சட்டப் பேரவை சென்று வர சிறப்பு பேருந்து இயக்கப் படுகிறது.

தற்சமயம் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை  நிறுத்தத்தினால் லட்சக்கணக்கான மக்கள் பேருந்து இல்லாமல் தவித்து வருகின்றனர்.  ஆனால் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்பு பேருந்துகள் இப்போதும் இயக்கப்படுகின்றன.  இன்று இரு பேருந்துகள் இயக்கப்பட்டன.   அதில் ஒரு பேருந்தில் 5 உறுப்பினர்களும்,  மற்றொரு பேருந்தில் 2 உறுப்பினர்களும் பயணம் செய்துள்ளனர்.    அவர்களிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்விகள் எழுப்பினார்.  ஆனால் அவர்கள் பதிலளிக்காமல் முகத்தை மூடிக் கொண்டு விட்டனர்.