சென்னை: தீபாவளிப் பண்டிகையையொட்டி  வெளியூர் செல்லும் மற்றும் வரும் பயணிகளின் வசதிக்காக சென்னையில் 24 மணி நேரமும் சிறப்பு இணைப்பு பேருந்துகளை தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் இயக்குகிறது.

பாவளி பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து வெளியூர் செல்ல புறப்படும் சிறப்பு பஸ் நிலையங்களுக்கு செல்வதற்கு வசதியாக சென்னை நகரில் பல்வேறு பகுதிகளிலிருந்து 310 சிறப்பு பஸ்களை இயக்க மாநகர் போக்குவரத்து கழகம் ஏற்பாடுகளை செய்துள்ளது. நாளை முதல் 13–ந்தேதி வரை 24 மணி நேரமும் இந்த பஸ்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

எதிர்வரும் தீபாவளி திருநாளை முன்னிட்டு, அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் புறப்படும் பின்வரும் 5 பேருந்து நிலையங்களுக்கு பொதுமக்கள் எளிதாக சென்றிட ஏதுவாக, மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், கூடுதலாக 310 சிறப்பு இணைப்பு பேருந்துகளை நாளை (11–ந்தேதி) முதல் 13–ந்தேதி வரை 3 நாட்களுக்கு 24 மணி நேரமும் இயக்கப்பட உள்ளது.

வரும் தீபாவளித் திருநாளினை முன்னிட்டு, பொது மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றிட ஏதுவாக, சென்னையிலிருந்து 11, 12 மற்றும் 13–ந்தேதிகளில் இயக்கப்படும் 9,510 பேருந்துகளில், 11ம் தேதி 2,225 பேருந்துகளும், 12ம் தேதி 3,705 பேருந்துகளும், 13ம் தேதி 3,580 பேருந்துகளும் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. மேலும், பல்வேறு மாவட்டங்களிலிருந்து 5,247 பேருந்துகள் என ஆக மொத்தம் 14,757 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

5 இடங்களிலிருந்து…

இத்தீபாவளி திருநாளினை முன்னிட்டு, சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திடவும், வெளியூர் செல்லும் பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையில், நாளை முதல் 13–ந்தேதி ஆகிய 3 நாட்களுக்கும் வெளியூர் செல்லும் பேருந்துகள் பின்வரும் ஐந்து இடங்களில் இருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாதவரம் புறநகர் பேருந்து நிலையம், தாம்பரம் புதிய பேருந்து நிலையம் (மெப்ஸ்) மற்றும் தாம்பரம் ரெயில் நிலைய பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி பேருந்து நிலையம், புரட்சிதலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் (கோயம்பேடு), கே.கே.நகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலிருந்து இயக்கப்படுகிறது.

பொதுமக்களின் வசதிக்காக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

கோயம்பேடு பஸ் நிலையம் செல்வதற்கு மொத்தம் 116 பஸ்கள் இயக்கப்படுகிறது. அந்த பஸ்களின் எண்கள் மற்றும் புறப்படும் இடம் விவரம் வருமாறு:–

159ஏ– திருவொற்றியூர்

121ஏ– மணலி

121எம் – மாதவரம்

15 – பிராட்வே

27பி– அண்ணா சதுக்கம்

46ஜி – எம்.கே.பி. நகர்

72 – தி.நகர்

70ஏ – ஆவடி

78 – திருவான்மியூர்

77 – ஆவடி

46 – திரு.வி.க. நகர்

570 – கேளம்பாக்கம்

159இ – எண்ணூர்

16கே – குன்றத்தூர்

570சி – கண்ணகி நகர்

48சி – வள்ளலார் நகர்

153 – பூந்தமல்லி

70வி– பெருங்களத்தூர்

தாம்பரம் புதிய பேருந்து நிலையம் (மெப்ஸ்) மற்றும் தாம்பரம் ரெயில் நிலைய பேருந்து நிலையம் செல்வதற்கு 114 பஸ்கள் இயக்கப்படுகிறது.

21ஜி பிராட்வே – வண்டலூர் உயிரியல் பூங்கா (வழி மெப்ஸ்)

இ18 பிராட்வே – கூடுவாஞ்சேரி(வழி மெப்ஸ்)

91 திருவான்மியூர் – தாம்பரம் (வழி மெப்ஸ்)

95 – திருவான்மியூர்

99 – அடையாறு

51 – வேளச்சேரி

515ஏ– கோவளம்

18ஜி – பிராட்வே

500 செங்கல்பட்டு

583 ஸ்ரீபெரும்புதூர்

515பி – திருப்போரூர்

வி51 – தி.நகர்

99ஏ – சோழிங்கநல்லூர்

515 மாமல்லபுரம்

5ஏ – தி.நகர்

ஜி18 – தி.நகர்

பூந்தமல்லி பேருந்து நிலையம் செல்வதற்கு மொத்தம் 57 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

62 – செங்குன்றம் பூந்தமல்லி 12

65பி – அம்பத்தூர் எஸ்டேட்

66 – தாம்பரம்

154 – தி.நகர்

54 – பிராட்வே

101 – திருவொற்றியூர்

49எப் – மந்தவெளி

மாதவரம் புறநகர் பேருந்து நிலையம் செல்ல 16 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

121 கட்–‡ எம்.எம்.பி.டி – கோயம்பேடு பேருந்து நிலையம்

114 செங்குன்றம் – கோயம்பேடு பேருந்து நிலையம்

121எப் தாம்பரம் – மாதவரம் பேருந்து நிலையம்

121பி கவியரசு கண்ணதாசன் நகர் – தாம்பரம்

157 திருவொற்றியூர் – செங்குன்றம்

கே.கே.நகர் பேருந்து நிலையம் செல்ல மொத்தம் 7 பஸ் இயக்கப்படுகின்றன.

5இ பெசன்ட் நகர் – வடபழனி 3

570வி கேளம்பாக்கம் – வடபழனி பேருந்து நிலையம்

மொத்தத்தில் 310 பஸ்கள் இயக்கப்படுகின்றன.