அவசர பயணத்திற்கு உதவும் தமிழக அரசின் கட்டுப்பாட்டு அறை…

சென்னை

    தமிழகத்தில் மார்ச் 31 வரை  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் தவிர்க்க முடியாத,  இன்றியமையாத காரணங்களால் பயணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால் அதற்கு உதவும் நோக்கில் தமிழக அரசால் அவசரகால கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

  இக்கட்டுப்பாட்டு அறையை கண்காணிக்க சென்னை காவல் துறை,  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு காவல் துணை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட உள்ளது.

  இரத்த உறவுடையோரின்  இறப்பு, திருமணம் மற்றும் மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட முதன்மைக் காரணங்களுக்காக மக்கள் தமிழகம் அல்லது வெளிமாநிலங்களுக்கு செல்ல விரும்பினால் 75300 01100 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். மேலும் குறுஞ்செய்தி மற்றும் வாட்ஸ்அப் மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம்.  gcpcorona2020@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சலும் அனுப்பலாம்.

     எந்த காரணத்திற்காக பயண அனுமதி வேண்டும் என்பதை கோரிக்கைக் கடிதமாகவும், அதனுடன் தக்க சான்று ஆவணங்களை இணைத்தும் சமர்ப்பிக்க வேண்டும். 

இச்சேவை அவசரத் தேவைக்கு மட்டுமே எனவும் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது…