டில்லி

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் திகார் சிறை கண்காணிப்பு காமிரா பதிவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆட்சியின் போது அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்திடம் இருந்து முக்கிய பிரமுகர்கள் செல்ல 12 ஹெலிகாப்டர் வாங்க ஒப்பந்தம் இடப்பட்டது. இதற்காக இந்தியாவில் உள்ள சிலருக்கு 10% கமிஷன் அளிக்கபட்டதாக புகார்கள் எழுந்தன. அதன் அடிப்படையில் ரூ.3600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தம் 2014ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது.

இதில் இடைத்தரகராக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் துபாயில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு கைது செய்யபட்டார். கடந்த 12 ஆம் தேதி இவர் நீதிமன்றத்தில், “துபாயில் இருக்கும் போது என்னை சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா எனது சிறை வாழ்க்கை நரகமாக இருக்கும் என மிரட்டினார். தற்போது என்னை சிறையில் அதற்கேற்ப கொடுமை செய்து வருகின்றனர்.” என புகார் அளித்தார்.

நேற்று  சிறை அதிகாரிகள் அதை மறுத்து அளித்த கண்காணிப்பு காமிரா பதிவில் அவர் முதலில் அடைக்கப்பட்ட சிறைப்பகுதிகளின் பதிவு மட்டுமே உள்ளது.  கொலை மிரட்டல் உள்ளதால் கிறிஸ்டியன் மைக்கேல் கடந்த ஒரு மாதமாக அதிக பாதுகாப்பு பகுதியில் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். சிரப்பு நீதிபதி அரவிந்த் குமார் சிறை அதிகாரிகளிடம் அவர் கடந்த ஒரு மாதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு  காமிரா பதிவை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.