பீகார், கேரளா அரசியல்வாதிகளுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள்

டில்லி:

பீகார் மற்றும் கேரளாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த நீதிமன்றங்கள் முன்னாள் மற்றும் தற்போதைய தலைவர்களை விசாரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மற்றும் நீதிபதிகள் எஸ்.கே. கவுல் மற்றும் கே.எம். ஜோசப் ஆகியோர் இதனை பரிந்துரைத்தனர். மேலும், இந்த மாதம் 14-ம் தேதிக்குள் பாட்னா உயர்நீதிமன்றம் மற்றும் கேரள உயர்நீதிமன்றம் இதற்கான உடன்பாட்டு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சிறப்பு நீதிமன்றங்களில் ஏற்கனவே இருக்கும் வழக்குகள் மாவட்ட நீதிமன்றங்களுக்கு அனுப்பப்பட வேண்டும், என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த இரண்டு மாநிலங்களின் மாவட்டங்களிளும் அரசியல்வாதிகளுக்கு எதிராக வழக்குகளைத் தாக்கல் செய்வதற்கு தேவையான பல கிளை நீதிமன்றங்களை அமைக்க உயர் நீதிமன்றங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான விவகாரம் தொடர்பாக விசாரித்து வரும் போது முன்னுரிமை அடிப்படையில் வாழ்நாள் கால வழக்குகளை சிறப்பு நீதிமன்றங்கள் எடுக்கும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படுவதோடு குற்றவியல் வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகளுக்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்று, வழக்கறிஞர் மற்றும் பா.ஜ.க தலைவர் அஸ்வினி உபாத்யாய் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடத்தப்பட்டது.

முன்னாள் பாராளுமன்ற மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு எதிராக 4,000 க்கும் அதிகமான கிரிமினல் வழக்குகள் 30 வருடங்களுக்கு மேலாகவும் நிலுவையில் இருப்பதாகவும் மேல் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.