2koyambeduசென்னை:
தீபாவளி, பொங்கல்போன்ற விசேஷ நாட்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க 3 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மூன்று இடங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் அனைத்து மாவட்ட, மாநில மக்கள் வசித்து வருகின்றனர். விசேஷ காலங்களில் அவர்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு திரும்புவது வழக்கம். இந்த சமயங்களில் பயணிகள் கூட்டம் அலை மோதும். ஒரே இடத்தில் அனைவரும் கூடுவதால் மக்கள் கூட்டம் ஒருபுறம், வாகன நெரிசல் ஒருபுறம் என சென்னை மாநகரமே ஜாம் ஆகிவிடுவது வழக்கமானது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வண்டலூரை தாண்டவே சில மணி நேரங்கள் ஆகிவிடுகிறது. இதனால் பயணிகளும், பேருந்து ஓட்டுனர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இதுபோன்ற நிலையை தடுக்க, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் சமீபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது சென்னையில் வடக்கு, மேற்கு, தெற்கு என பிரித்து மூன்று இடங்களில் இருந்து பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, தென் மாவட்டங்களுக்கு செல்லும் 40 சதவீத பேருந்துகள் வண்டலூர் அல்லது கூடுவாஞ்ச்சேரியில் இருந்தும், கிழக்கு கடற்கரை சாலை பகுதி மற்றும் மாதவரத்தில் இருந்தும் பேருந்துகள் இயக்க முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
ஆனால் இதுபற்றிய அதிகாரப்பூர்வான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் எனத் தெரிகிறது