சென்னை:

பொதுப்பணித்துறை மேற்கொள்ளக் கூடிய பணிகளின் தரத்தை சோதனை செய்ய தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது என சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சிதுறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது.

பொதுப்பணித்துறை மீதான விவாதத்தின் போது பேசிய எதிர்கட்சி துணை தலைவர் துரை முருகன், சாலை களில் தடுப்பு அமைக்கும் பணிகள் முறையாக மேற்க்கொள்ளப்படவில்லை என குற்றம் சாட்டினார்.

அதற்கு பதிலளித்த முதலமைச்சர், எந்த இடத்தில் பணிகள் சரியாக செய்யவில்லை என்பதை சுட்டி காட்டினால், அதை ஆய்வு செய்து தவறு இருக்கும் பட்சத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

மேலும், நெடுஞ்சாலை துறை, பொதுப்பணித்துறை பணிகளின் தரத்தை ஆய்வு செய்ய தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு அதிகாரிகள் ஆய்வு செய்யும் போது தவறு இருக்கும் பட்சத்தில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து மீண்டும் பேசிய  பாதாள சாக்கடை திட்டம் நடைபெறும் இடங்களில் சாலைகள் முழுமையாக போடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.

அதற்கும்  பதிலளித்து பேசிய முதலமைச்சர், ஒரு திட்டம் போடும் போதே சாலைகளை சீரமைப்பதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்து திட்டம்  தொடங்க வேண்டும்,  ஆனால் திமுக அதுபோல் செய்யாமல் பாதியில் விட்டுவிட்டதாகவும், அவ்வாறு விடப்பட்ட இடங்களில் அதிமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தான் சாலை அமைக்கப்பட்டது.

கிராமப்புற விவசாயிகள் மூலம் நடைபெறும் குடிமராமத்து பணிகளில் எந்த சிபாரிசும், முறைகேடும் என்று கூறிய முதல்வர்.  ஐஏஎஸ் அதிகாரி கொண்டு இத்திட்டப்பணிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

பொதுப்பணி மற்றும் உள்ளாட்சித்துறையின் கீழ் 39,000 ஏரிகள் தமிழகம் முழுவதும் உள்ளது என்றும், 2016-17ல் 1,513 ஏரிகள் தூர்வார திட்டமிட்டு, பெரும்பாலான ஏரிகள் தூர்வாரி முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதேபோல, 2019-20 ஆண்டுகளில் 1,829 ஏரிகள் ரூ.498 கோடியில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.