இன்னொரு அயனாவரம் டைப்  பலாத்காரம்.

இன்னொரு அயனாவரம் டைப்  பலாத்காரம்.

சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன்

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் பதினாறு வயது இளம்பெண் ஒருவர் தனியாக அமர்ந்து அழுதுகொண்டிருந்தார்.

இதைப் பார்த்தவர்களில் ஒருவர் சந்தேகப்பட்டு, குழந்தைகள் நலக் குழுவுக்குத் தகவல் தெரிவித்தார். அந்தக் குழு உடனே சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு விரைந்து வந்து சிறுமியை விசாரித்தது. அப்போது அந்த சிறுமி சொன்ன தகவல்கள் ஒவ்வொன்றும் அதிர்ச்சிகரமாக இருந்தன.

ஆறு மாதங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பாட்டியுடன் கோவிலுக்கு வந்த சிறுமி வழிதவறிப்போய் பேருந்து நிலையம் வந்துவிட்டார். படிப்பறிவில்லாத இந்த சிறுமி. பேருந்து நிலையத்தில் திரிந்து கொண்டிருந்ததைச் சென்னையைச் சேர்ந்த சங்கர் ராவ் என்ற முன்னாள் ரயில்வே ஊழியர் பார்த்தும் அணுகி பேச்சுக் கொடுத்திருக்கிறார்.

கடைசியில் சங்கர் ராவ் சொன்னதையெல்லாம் நம்பி அவருடன் பதினாறு வயது சிறுமி சென்னைக்கு வந்திருக்கிறார் .

இதன்பிறகுதான் பயங்கரமே ஆரம்பித்துள்ளது. தனது வீட்டில் சிறுமியை அடைத்து வைத்த சங்கர்  ராவ், தொடர்ந்து அவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி வந்திருக்கிறார். இந்தக் கொடுமை போதாதென்று தனது நண்பர்களையும் அடிக்கடி வீட்டுக்கு வரவழைத்திருக்கிறார் அப்போது அவர்களும் கூட்டாகச் சேர்ந்து சிறுமியைப் பலாத்காரம் செய்து இருக்கின்றனர்.

இப்படியே பாலியல் சித்திரவதை ஆறு மாதங்களாக நடந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு சிறுமி கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். உடனே சங்கர் ராவ் சிறுமியை ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்று அழைத்துச் சென்றபோது தான், சிறுமி நான்கு மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது

பதறிப்போன சங்கர் ராவ் நைசாக சிறுமியை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குக் கொண்டுபோய் அனாதையாக விட்டுவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகி விட்டார்.

படிப்பறிவில்லாத சிறுமியிடம் பெரும் சிரமப்பட்டு சங்கர் ராவின் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை போலீசார் பெற்று சங்கரராவையும் பிடித்துவிட்டனர்.நேற்று முன்தினம் போஸ்கோ சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட சங்கர் ராவ், தந்த தகவல்களின் அடிப்படையில் அவரது நண்பர்களும் தற்போது தேடப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

ஆந்திராவிலிருந்து பாட்டி வரவழைக்கப்பட்டு அவரிடம் சிறுமி ஒப்படைக்கப்படுவார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சிறுமி காணாமல் போனதாக அவரின் குடும்பத்தின் விசாகப்பட்டிணத்தில் ஏற்கனவே புகார் அளித்துத் தேடிவரும் நிலையில்தான் இவ்வளவு கொடூரங்களும் அரங்கேறியுள்ளன.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Ezumalai venkatesan, Patrikaidotcom, special Article, tamil news, ஏழுமலை வெங்கடேசன், சிறப்பு செய்தி
-=-