கார்த்திகை தீபம் சிறப்புப் பதிவு
தீபங்கள் பதினாறு 
தூபம், தீபம், புஷ்பதீபம் (பூ விளக்கு), நாத தீபம், புருஷா மிருகதீபம், கஜதீபம், ருயாஜத (குதிரை) தீபம், வியாக்ர (புலி) தீபம், ஹம்ஸ (அன்னம்) தீபம், கும்ப  (குடம்) தீபம், குக்குட (கோழி) தீபம், விருக்ஷ தீபம், கூர்ம (ஆமை) தீபம், நட்சத்திர தீபம், மேருதீபம், கற்பூர தீபம் என தீபங்கள் 16 வகைப்படும்.
தூக்கு விளக்குகள் எட்டு
1. வாடா விளக்கு
2. தூக்கு விளக்கு
3. தூண்டா மணி விளக்கு
4. நந்தா விளக்கு
5. கூண்டு விளக்கு
6. புறா விளக்கு
7. சங்கிலித் தூக்கு விளக்கு
8. கிளித்தூக்கு விளக்கு.
பூஜை விளக்குகள் ஒன்பது
சர்வ ராட்சத தீபம், சபூத தீபம், பிசாஜ தீபம், கின்னர தீபம், கிம்புரு தீபம், கணநாயக தீபம், வித்யாதர தீபம், கந்தர்வ தீபம், பிராக தீபம் ஆகியவை 9 வகை பூஜை  விளக்குகளாக வழக்கத்தில் உள்ளன.
சரவிளக்கு, நிலை விளக்கு, கிளித்தட்டு விளக்கு ஆகியன கோவில் விளக்குகளின் மூன்று வகைகளாகும்.
கைவிளக்குகள் ஐந்து
கஜலட்சுமி விளக்கு, திருமால் விளக்கு, தாமரை விளக்கு, சிலுவை விளக்கு, கணபதி விளக்கு ஆகியவை கை விளக்குகளாகும்.
நால்வகை திக்பாலர் தீபங்கள்: ஈசான தீபம், இந்திர தீபம், வருண தீபம், யம தீபம்.
அஷ்டகஜ தீபங்கள் எட்டு
ஐராவத தீபம், புண்டரீக தீபம், குமுத தீபம், ஜனதீபம், புஷ்ப கந்த தீபம், சார்வ பவும தீபம், சுப்ரதீபம், பித்ர தீபம் .
தீபங்கள் ஏற்றும் இடங்கள்:
வீட்டின் பூஜையறை,  நடு முற்றம், சமையலறை, துளசி மாடம், பாம்புப் புற்று, நீர் நிலைகளின் கரைகள், ஆலயம் போன்ற இடத்திலும் தீபங்களை ஏற்றலாம்.
மாலை நேரம் நடு முற்றத்தில் மாக்கோலம் போட்டு மஞ்சள் திரி வைத்து நெய் தீபம் ஏற்றினால் அந்த குடும்பம் வறுமையின் ஆழத்தில் கிடந்தாலும் மிகக் கண்டிப்பாகச் செல்வச் செழிப்பின் உச்சத்திற்கு வருமென்று சாஸ்திரங்கள் உறுதியாகச் சொல்லுகின்றன.