மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம், ஆஸ்திரேலிய அணியின் தோல்வியில் அவர்களுக்கான ஒரு துயரமும் ஒளிந்துள்ளது.

மெல்போர்ன் மைதானம், ரிக்கிப் பாண்டிங் போன்றவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இந்த மைதானத்தில், கடந்த 32 ஆண்டுகளில், ஆஸ்திரேலிய அணி பங்கேற்ற டெஸ்ட் போட்டிகளில், அந்த அணியின் வீரர்கள் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் விட்டதில்லை.

ஆனால், கொடுமை என்னவென்றால், இந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில், அந்த அணியில் ஒருவரும் அரைசதம் கூட அடிக்கவில்லை. லபுஷேன் அதிகபட்சமாக 48 ரன்கள் வரை அடித்தார். அந்தளவிற்கு அவர்களை அலற வைத்தனர் இந்திய பவுலர்கள்.

ஆனால், இந்தியா தரப்பில் ஒரு சதம் மற்றும் அரைசதம் அடிக்கப்பட்டன. மேலும், இரு அணிகளும் மோதிய கடந்த 6 டெஸ்ட் போட்டிகளில், ஆஸ்திரேலியர்களால் ஒரு சதம்கூட அடிக்க முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்திய தரப்பிலோ மொத்தம் 6 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன.