சென்னை:

றுமைக்கோட்டுக்கு கீழே உள்ள ஏழை மக்களுக்கு ரூ.2000 நிதி உதவி திட்டம், சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பயனாளிகளுக்கு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை இடைக்கால பட்ஜெட்  தொடர்பான விவாதத்தின் போது,  விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,‘‘ கஜா புயலாலும், வறட்சியாலும் பாதிக்கப்பட்டுள்ள 60 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கு ஒருமுறை சிறப்பு நிதியுதவியாக ரூ.2000 வழங்கப்படும்’’ என்றும்,   இந்த தொகை நேரடியாக அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் எனவும் கூறியிருந்தார்.

அதைத்தொடர்ந்து நிதி வழங்குவதற்கான கணக்கெடுப்பு  பணிகளும், தொழிலாளர்களின் விபரங்களும் தீவிரமாக சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ரூ.2000 நிதி உதவி திட்டத்தை  சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.  சில பயணாளிகளுக்கு நிதி உதவி வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது முதல்வருடன்   துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்பட அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிதி உதவி கணக்கெடுப்புகளின் அடிப்படையில் குடும்ப தலைவியின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.