Random image

‘என்னை பிடிக்க முடியாது’: சவால் விட்ட ‘புல்லட்’ நாகராஜன் கைது: என்கவுண்டர் செய்யப்படுவாரா?

மதுரை:

காவல்துறை அதிகாரிகளுக்கு வாட்ஸ்அப் மூலம் மிரட்டில் விடுத்த பிரபல ரவுடி புல்லட் நாகராஜன், தன்னை உலகில் எங்கு தேடினாலும் பிடிக்க முடியாது என்று சவால் விட்டார். தற்போது அவர் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் என்கவுண்டர் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மதுரை பகுதியை கலக்கி வந்த புல்லட் நாகராஜன் என்ற ரவுடி மீது  கொலை, கொள்ளை உள்பட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.  தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலத்தை சேர்ந்தவரான புல்லட் மதுலை  சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு ஊர்மிளாவுக்கு மிரட்டல் விடுத்து ஆடியோ வெளியிட்டு இருந்தார். அந்த ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

அதையடுத்து, பெரியகுளம் தென்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனகலாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தும், ‘புல்லட்’ நாகராஜன் ஆடியோ வெளியிட்டு இருந்தார். இவை சமூக வலைதளங்களில் வைரலாக பரவி  பரபரப்பை ஏற்படுததியது. தொடர்ந்து மற்றொரு ஆடியோவும் வெளியாகி சமூக வலைதளங்களில் மீண்டும் பரபரப்பை பற்ற வைத்தது. இந்த முறை தேனி மாவட்ட கலெக்டரையும், மாவட்ட போலீசாரையும் விமர்சித்து பேசி இருந்தார்.

காவல்துறையினரை விமர்சித்த விவகாரம் காரணமாக புல்லட்டை பிடிக்க  7 தனிப்படை அமைக்கப்பட்டது.  . புல்லட் நாகராஜனை சல்லடைப்போட்டி காவல்துறையினர்  தேடி வந்தனர். இந்த நிலையில், புல்லட் நாகராஜன் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தேனி பெரிய குளம் டி.எஸ்.பி. ஆறுமுகம் துப்பாக்கி முனையில்  விரட்டிச் சென்று புல்லட் நாகராஜனை செய்து செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது, நாகராஜன்  தேனி அருகே உள்ள  தென்கரை காவல்நிலையத்தில் வைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.  அவரை என்கவுண்டர் செய்யப்பட வாய்ப்பிருப்தாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.