பிள்ளையார் பட்டி விநாயகருக்கு இன்று நடைபெற்ற விசேஷ பூஜை – வீடியோ

மதுரை: கொரோனா காரணமாக கோவில்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பிள்ளையார் பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் பூஜை இணையதளங்கள் மூலம் ஒளிபரப்பானது.

வீடியோசிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ளது பிள்ளையார்பட்டி. இங்குள்ள  கற்பக விநாயகர் கோவில்  பிரபலமான ஆன்மிக ஸ்தலமாகும். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஆண்டுதோறும், விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் இங்க  கோலாகலமாக நடத்தப்படுவது வழக்கம். ஆனால்,  இந்த ஆண்டு கொரோனா  பொதுமுடக்கம் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும்,  பக்தர்கள் அனுமதி இன்றி கோவிலில் குறைந்த எண்ணிக்கையிலான நபர்களைக் கொண்டு  ஏற்கனவே கோவிலில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.அதைத்தொடர்ந்து, கோவில் விழாக்கள் எளிமையாக நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியான  இன்று  பக்தர்கள் அனுமதி இன்றி, முக்கிய கோவில் நிர்வாகிகள் முன்னிலையில் விநாயகர் பூஜை நடைபெற்றது. முன்னதாக கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.

இன்று நடைபெற்ற விசேஷ பூஜை தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

You may have missed