Random image

எஸ்.பி.பாலசுப்ரமணியம் குணமாக சபரிமலையில் சிறப்பு பூஜை….!

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தாக்குகிறது .

கடந்த 5-ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு செயற்கை சுவாசம், எக்மோ போன்ற உயிர்காக்கும் மருத்துவத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் (SP Balasubramaniam) விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும், அவரது ரசிகர்கள் உட்பட திரைத்துறையினர் பலர் வெகுஜன பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் (SP Balasubramaniam) விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்டு உள்ளது. திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஊழியர்கள் சிலர் கோயில் முன் உள்ள கொடிமரத்தின் அருகே எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சங்கராபரணம் எனும் பாடலை வாசித்து, அவர் விரைவில் நலம் பெற வேண்டி பிரார்த்தித்தனர். இதன் பின்னர் கோயிலில் சிறப்பு பூஜையும் நடத்தப்பட்டது. இந்த சிறப்பு பூஜை சுமார் ஒரு மணிநேரம் நடத்தப்பட்டது.

You may have missed