இந்தியா முழுவதும் உலகக் கோப்பை வெற்றிக்காக சிறப்பு வழிபாடு

டில்லி

லகக் கோப்பை 2019 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வெற்றி பெற நாடெங்கும் சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகின்ரன.

 

இங்கிலாந்து நாட்டில் தற்போது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் இந்திய அணி தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணியை வென்றுள்ளது.  அதை அடுத்து நியுஜிலாந்து அணியுடன் இந்தியா மோதிய போது மழையின் காரணமாக ஆட்டம் நடைபெறவில்லை. தற்போது இந்தியா 5 புள்ளிகளுடன் 4ஆம் இடத்தில் உள்ளது.

 

இன்று மான்செஸ்டர் ஓல்ட் டிரபோர்ட் மைதானத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் போட்டி இடுகின்றன. இதற்கு முன்பு நடந்த உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானுடன் இந்தியா ஆறு முறை மோதி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இந்த வருட போட்டியிலும் இந்தியா வெற்றி பெறும் என வீரர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

 

பிரிட்டன் வானிலை ஆய்வு மையம் இன்று பிற்பகல் கனமழை பெய்வதற்க்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. நடந்து வரும் இந்த தொடரில் இது வரை 4 ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. இன்று மழை பெய்தால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த ஆட்டம் நடைபெறாத நிலை உண்டாகும். அது மட்டுமின்றி ஆட்டம் நின்று போனால் ரூ.160 கோடி விளம்பர வருவாய் இழப்பு ஏற்படும்.

 

இந்திய ரசிகர்கள் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என நாடெங்கும் சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர். திருப்பதியில் மலையின் படிகளில் தேங்காய் உடைத்து ரசிகர்கள் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்துள்ளனர். அத்துடன் வாரனாசியில் உள்ள கோவில்களில் சிறப்பு ஆரத்தி வழிபாடுகள் செய்துள்ளனர். இதைப் போல் தமிழகத்தில் தஞ்சை, ஈரோடு, கோவை, வேலூர், காஞ்சி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆறடி உயரத்துக்கு ஒரு ஊதுபத்தியை ஏற்றி இந்திய அணி வெற்றி பெற வழிபாடு நடத்தி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.