ஐபிஎல் கோப்பைக்கு சென்னை பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

சென்னை:

ந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 3வது முறையைக வெற்றிக்கோப்பையை தட்டிவந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஐபிஎல் சூதாட்டம் காரணமாகஐபிஎல் போட்டிகளில் ஆட 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு தடை முடிந்ததும்  சிஎஸ்கே அணி களத்தில் இறங்கியது. இறுதி போட்டியில் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தி 3வது முறையாக கோப்பை தட்டி வந்தது.

இந்த நிலையில் சென்னை அணியின் உரிமையாளர்கள் குடும்பத்தினர் மற்றும் நிர்வாகிகள் இன்று சென்னை அணி பெற்ற ஐபிஎல் கோப்பையை தி.நகரில் உள்ள பெருமாள் கோவிலுக்கு எடுத்து சென்று சிறப்பு பூஜை செய்தனர்.

கோப்பைக்கு துளசிமாலையை அணிவித்த பெருமாள் கோவில் பூசாரி சிறப்பு பூஜை செய்து அதன்பின்னர் மீண்டும் கோப்பையை அணி நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.

இந்த சிறப்பு பூஜையில்  கிரிக்கெட் ரசிகர்கள், பொதுமக்கள் உள்பட  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.