சத்தீஷ்கரில் கர்ப்பிணி பெண்களுக்கான பிரத்யேக தனிமைப்படுத்தல் மையம்!

ராய்ப்பூர்: சத்தீஷ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூரில் கர்ப்பிணி பெண்களுக்கான பிரத்யேக முதல் கொரோனா தனிமைப்படுத்தல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் ராய்ப்பூரிலிருந்து 120 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த பிலாஸ்பூர். இந்தப் பிரத்யேக மையத்தில் தற்போதைய நிலையில் 8 கர்ப்பிணி பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவருமே பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

“மாநில முதலமைச்சர் பூபேஷ் பகல் வழங்கிய அறிவுறுத்தல்களின்படி, கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதான நபர்களுக்கென்று தனிமைப்படுத்தல் மையங்களில் சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன” என்றும் அந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அந்த மையத்தில், சத்தான உணவு, ஸ்கிரீனிங் வசதிகள், பாதுகாப்பு கியர் உள்ளிட்ட வசதிகள் உள்ளன மற்றும் அங்கே ஒரு நாளைக்கு மூன்றுமுறை சுத்தப்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அனைத்து நேரங்களிலும் பணியில் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.