ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் தொடர் உண்ணாவிரதம்

டில்லி:

ந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் தொடர் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் தொடர் அமளி காரணமாக பாராளுமன்ற அவைகளை முடக்கி வந்த நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரசை சேர்ந்த 5 எம்.பி.க்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகரை சந்தித்து கடிதம் கொடுத்தனர்.

இந்நிலையில், டில்லியில் உள்ள ஆந்திரா பவனில் ஒய்எஸ்ஆர் காங்கிரசை சேர்ந்  5 பேரும் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி உள்ளனர்.

இவர்களுடன் ஆந்திராவில் இருந்து வந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களும், கட்சி நிர்வாகிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.