ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து: உண்ணாவிரதம் தொடங்கினார் சந்திரபாபு நாயுடு

அமராவதி:

ந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி, மத்திய அரசை வலியுறுத்தி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, பாஜகவுடன் தெலுங்குதேசம் கூட்டணி அமைத்து வெற்றிபெற்றது. அப்போது தேர்தல் வாக்குறுதியாக  ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என கூறப்பட்டது.  ஆனால்,  த்திய அரசு ஏற்கனவே உறுதி அளித்தபடி, சிறப்பு அந்தஸ்து தர மறுத்துவிட்டதால், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தெலுங்குதேசம்.

மேலும், மத்திய அமைச்சரவையில் இருந்தும் தெலுங்குதேச அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். அதையடுத்து, பாராளுமன்ற வளாகத்திலும், பாராளுமன்றத்தினுள்ளும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி போராட்டம் நடத்தினர். தொடர்ந்து மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில்  ஆந்திர மாநிலத்துக்கு சிறப்ப சிறப்பு அந்தஸ்து கோரி அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளார்.

ஆந்திராவில் எதிர்க்கட்சிகள் சார்பில் சமீபத்தில் நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி பங்கேற்காத நிலையில், இன்றைய தினம் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்போவதாக சந்திரபாபு நாயுடு அறிவித்திருந்தார்.

அதன்படி அவரது பிறந்தநாளா இன்று   விஜயவாடாவில் உள்ள இந்திராகாந்தி நகராட்சி மைதானத்தில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளார்.

இந்த உண்ணாவிரதத்தில் தெலுங்குதெச  அமைச்சர்கள், எம்.பி.க்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.