சென்னையில் கொரோனா பரவல் கண்காணிக்க 6 மண்டலங்களில் சிறப்பு குழுக்கள்! முதல்வர் அறிவிப்பு

சென்னை:
மிழகத்திலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டமாக சென்னை அறியப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 6 மண்டலங்களில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
 தமிழகத்தில் கடந்த 14 நாட்களில் பதிவான கொரோனா தொற்றில் 54.25 சதவீதம் சென்னையில் பதிவாகி உள்ளது.  குறிப்பாக சிஏஏக்கு எதிராக ஷாகின் போராட்டம் நடத்திய ராயபுரம் பகுதியில் தொடக்கம் முதலே கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வருகிறது. கடந்த ஒருவாரமாக கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது.
சென்னையின் ஒட்டுமொத்த பாதிப்பில் 65% ஆறு மண்டலங்களில் உள்ளது
1. தண்டையார்பேட்டை
2. திரு.வி.க.நகர்
3. ராயபுரம்
4. திருவல்லிக்கேணி
5. அண்ணாநகர்
6.கோடம்பாக்கம்
இந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் மாஸ்க், சானிடைசர், 250 கிராம் கிருமி நாசினி பவுடர் வழங்கப்படும்
இந்த 6 மண்டலங்களில் நோய் தொற்றை கட்டுப்படுத்த சிறப்பு குழுக்கள் அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.