சென்னை:

மிழகத்தில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு இருப்பதாக  தேர்தல்  டி.ஜி.பி.அசுதோஷ் சுக்லா  கூறி உள்ளார். மேலும், ஒவ்வொரு போலீஸ் நிலைய எல்லைக்குள் 4 குழுக்கள் நியமனம் செய்திருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற அனைத்து பாதுகாப்பு பணிகளும் முழு வீச்சில் செய்யப்பட்டுள்ளன. அந்த பணிகள் திருப்திகரமாக உள்ளது. தேர்தல் பணிகளில் உள்ளூர் போலீசாருக்கு உதவியாக துணை ராணுவத்தினரும் போதுமான எண்ணிக்கையில்  வரவழைக்கப் பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலுக்காக முழுஅளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தைரியமாக முன்வந்து வாக்களிக்க முன்வர வேண்டும். அதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அனைத்து இடங்களிலும் நாங்கள் செய்துள்ளோம்.

‘மேலும் வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அனைத்து பதற்றமான வாக்குச்சாவடிகளிலும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தவிர அதிரடிப்படை மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசாரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்காக தனிப்படை போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். எங்காவது ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள் என்று பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தாலும் அதுபற்றி எங்களுக்கு தகவல் கொடுத்தால் அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பணம் கொடுப்பதை தடுக்க ஏற்கனவே பறக்கும் படையினர் செயல்படுகின்றனர். இவர்கள் தவிர ஒவ்வொரு மாவட்டத்திலும் போதுமான நடமாடும் தனிப்படை போலீசார் ஈடுபடுவார்கள். தனிப்படை போலீசார் மோட்டார்சைக்கிளில் சென்றும் சோதனையில் ஈடுபடுவார்கள்.

ஒவ்வொரு போலீஸ் நிலைய எல்லைக்குள்ளும், 3 முதல் 4 போலீஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு பணம் வினியோகத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தனி பாதுகாப்பு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் முதல் அடுக்கில் துணை ராணுவத்தினரும், அதற்கு அடுத்த அடுக்கில் தமிழ்நாடு சிறப்பு போலீசாரும் மூன்றாவது அடுக்கில் அதிரடி படையினரும் ஈடுபடுத்தப்படுவார்கள்.

ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் கட்டுப்பாட்டு அறையுடன் ஒரு துணை சூப்பிரண்டு தலைமையில் 24 மணி நேர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஓ

ட்டுப்பதிவு முடிந்து ஒரு மாதத்துக்கு மேல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படுவதால் எந்த பிரச்சினையும் வராது. எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு பூட்டுப்போடப்பட்டு துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வார்கள்.

மேலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் எந்த சந்தேகமும் எழாது என்று கூறினார்.

அப்போது செய்தியாளர்கள், போலீஸ்காரர் ஒருவர் தபால் ஓட்டை அரசியல் கட்சிக்கு விற்றது குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்தவர்,  அதுகுறித்த எந்த தகவலும் வரவில்லை. அது பற்றி விசாரிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.