தென் மாவட்டங்களுக்கு ஸ்பெஷல் ரெயில்! இன்று முன்புதிவு!!

சென்னை:

ழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கபப்ட உள்ளது. அதற்கான அறிவிப்பை தென்னக ரெயில்வே வெளியிட்டு உள்ளது.

சென்னை எழும்பூரிலிருந்து மதுரை, திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

special-train

செப்டம்பர் 23ந்தேதி

ரயில் எண் 06029: சென்னை எழும்பூரிலிருந்து வரும் செப்டம்பர் 23-ஆம் தேதி இரவு 9.05 மணிக்குப் புறப்பட்டு, அடுத்த நாள் காலை 7.30க்கு மதுரை சென்றடையும்.

செப்டம்பர் 24ந்தேதி
ரயில் எண் 06035: செப்டம்பர் 24 ஆம் தேதி இரவு 11.45 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு, அடுத்த நாள் காலை 9.30க்கு மதுரை சென்றடையும்.

இந்த இரண்டு சிறப்பு ரயில்களும் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு நிலையங்கள் வழியாக மதுரையைச் சென்றடையும்.

செப்டம்பர் 30ந்தேதி அக்டோபர் 1ந்தேதி
ரயில் எண் 06001: சென்னை எழும்பூரிலிருந்து வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி இரவு 9.05 மணிக்குப் புறப்பட்டு, அடுத்த நாள் காலை 10.45க்கு திருநெல்வேலி சென்றைடையும். அதேபோல், ரயில் எண் 06001 என்ற சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூருக்கு அக்டோபர் 1 ஆம் தேதி, பகல் 2.45-க்கு புறப்பட்டு மறுநாள் காலை (அக்.2) 4.15க்கு வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கார்ட்டூன் கேலரி