ர்மதா

புதியதாக தேர்ந்தெடுக்கப்படும் ஐ ஏ எஸ், ஐ பி எஸ் மற்றும் ஐ எஃப் எஸ் அதிகாரிகளுக்கு குஜராத் மாநிலத்தில் சர்தார் படேல் சிலை அருகே பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

ஒவ்வொரு வருடமும் சிவில் சர்வீஸ் அதிகாரிகளான ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகள் எழுத்து மற்றும் நேரடி தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்கள் மாநில வாரியாக தேர்வு செய்யப்பட்டு அதன் பிறகு மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் இறுதி தேர்வு நடைபெறு கிறது. அதன் பிறகு அவர்கள் சம்பந்தபட்ட துறைகளில் பயிற்சி அளிக்கப்படுவது வழக்கமாகும்.

தற்போது மோடி அரசு இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து அதிகாரிகளுக்கும் ஐந்து நாட்கள் பயிற்சி முகாம் ஒன்றை அமைத்து அதில் பயிற்சி வழங்க முடிவு செய்துள்ளது. இந்த பயிற்சி முகாம் குஜராத் மாநிலத்தில் உள்ள சர்தார் படேல் சிலை வளாகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் சர்வீஸ் அதிகாரிகளால் இரும்பு மனிதர் என போற்றப்படுபவர் இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான படேல் ஆவார். சர்தார் படேல் சுதந்திரம் அடைவதற்கு நான்கு மாதங்கள் முன்பு அதாவது ஏப்ரல் 21 அன்று சிவில் சர்வீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் உரையாற்றினார்.

இந்த நிகழ்வை ஒட்டி ஏப்ரல் 21ஆம் தேதி சிவில் சர்வீஸ் தினமாக கொண்டாடப்படுகிறது.  அதனால் இந்த பயிற்சி முகாம் சர்தார் படேல் சிலை வளாகத்தில் நடத்தப்பட உள்ளது.

இந்த பயிற்சி முகாம்களுக்கான துறைகள் ஒவ்வொரு வருடமும் மாற்றப்பட உள்ளது. இந்த பயிற்சி விவரம் குறித்து அந்த துறையின் பிரபலங்கல் உரையாற்ற உளளனர். இதன் மூலம் அந்த துறைகள் பற்றிய முழு விவரங்களும் அறிந்துக் கொள்ள புதிய அதிகாரிகளுக்கு முழு வாய்ப்பு கிடைக்கும்.