போலி செய்திகளை தவிர்க்க பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு பயிற்சி – கூகுள்

போலி செய்திகளை தவிர்ப்பதற்காக கூகுள் நிறுவனம் 8,000 இந்திய பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு (நெட்வொர்க்) பயிற்சி அளிக்க உள்ளது. கூகுளின் செய்தி நிறுவனம் இணையதளத்தில் போலி செய்திகள் பரவுவதை தவிர்க்கும் விதமாக இந்திய பத்திரிகையாளர்களுக்கு பயிற்சி அளிக்க முன்வந்துள்ளது.
google
கூகுள் செய்தி நிறுவனம் முதலில் 200 பத்திரிகையாளர்களை இந்தியா முழுவதும் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஆறு மொழிகளில் பயிற்சி அளிக்க உள்ளது. திறமைகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பத்திரிகையாளர்களுக்கு முகாம்களில் 5 நாட்கள் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சி பெற்ற பத்திரிகையாளர்கள் கூகுள் ஏற்பாடு செய்யும் பிற முகாம்களில் இரண்டு நாள், ஒரு நாள் அல்லது பாதி நாள்களில் பங்கேற்று தகவல் தொழில்நுட்ப பயிற்சியை பெறலாம் என்று கூகுள் அறிவித்துள்ளது.

இதன் மூலம் இணையதளத்தில் தவறான செய்திகள் பரப்பப்பட்டால் அதனை பத்திரிகையாளர்களே சரிசெய்துக் கொள்ளலாம் அல்லது அந்த செய்திகளை தவிர்க்கலாம் என்று கூகுள் தெரிவித்துள்ளது. பத்திரிகையாளர்களுக்கு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, பெங்காலி, தெலுங்கு, மராத்தி, கனடம் உள்ளிட்ட மொழிகளில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

நடப்பு நிகழ்வுகள், ஆன்லைனில் திருத்தம், டிஜிட்டல் முறையில் சரிபார்த்தல் உள்ளிட்டவைகளை First Draft, Storyful, AltNews, BoomLive, Factchecker.in போன்ற முதன்மை இணையதள செய்திகளில் இருந்து பெற பத்திரிகையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். ”நம்பகத்தன்மையான அதிகாரப்பூர்வ ஊடகங்களை ஆதரிப்பது கூகுளின் முக்கிய நோக்கமாகும்” என்று கூகுள் செய்தி நிறுவனத்தில் தலைவர் லியூ கூறியுள்ளார். மேலும் 200 பத்திரிகையாளர்களுக்கு தற்போது பயிற்சி அளிப்பது கூகுளின் இலக்காக உள்ளது என்றும், அடுத்த ஆண்டு 8000 பத்திரிகையாளர்களுக்கு ஆறு மொழிகளில் நெட்வொர்க் குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளதாகவும் லியூ தெரிவித்தார்.