இன்று கேரளாவுக்கு எழும்பூரில் இருந்து சிறப்பு ரெயில்

சென்னை

சென்னை எழும்பூரில் இருந்து இன்று கேரள மாநிலம் எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.   ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.    சாலைப் போக்குவரத்தும் நிறுத்தப் பட்டுள்ளது.   இதை ஒட்டி சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் மர்றும் திருவனந்த புரத்துக்கு இன்று சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

இன்று நண்பகல் 12.30 மணிக்கு கிளம்பும் எர்ணாகுளம் சிறப்பு ரெயில் (எண் 06037) நாளை காலை 11 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.  இந்த ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருது நகர்,  சாத்தூர், கோவில்படி, திருநெல்வேலி,  வள்ளியூர், நாகர்கோவில், குழித்துறை, திருவனந்தபுரம் , கொல்லம், காயன்குளம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

இதே மார்க்கத்தில் திருவனந்தபுரம் வரை மற்றொரு சிறப்பு ரெயில் (எண் 06039) இன்று மாலை 6.50 மணிக்கு இயக்கப்பட உள்ளது.  இந்த ரெயில் நாளை காலை 9.15 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.

இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.