கொல்லம் செல்லும் சிறப்பு ரெயில்கள் நேதி அறிவிப்பு

சென்னை

சென்னை செண்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து கொல்லம் வரை சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

தென்னக ரெயில்வே இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி சென்னை சென்டிரல் மற்றும் கொல்லம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த சிறப்பு ரெயில் எண் 06047 சென்னை செண்டிரலில் இருந்து டிசம்பர் மாதம் 3, 5, 7, 10,12,17,19,24,26,31 மற்றும் ஜனவரி மாதம் 2, 7, 9 மற்றும் 14 ஆம் தேதி அன்று இரவு 9.40 மணிக்கு புறப்பட உள்ளது

கொல்லத்தில் இருந்து ரெயில் எண் 06048 டிசம்பர் மாதம் 4, 6, 11, 13, 18, 20, 27 மற்றும் ஜனவரி மாதம் 3, 8, மற்றும் 10 ஆம் தேதி அன்று மாலை 3 மணிக்கு புறப்பட உள்ளது.

இந்த சிறப்பு ரெயில்கள் தமிழகத்தில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம்,ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.