Random image

வரும் 11 ஆம் தேதி முதல் திருப்பதிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம்

சென்னை

ரும் செப்டம்பர் 11 ஆம் தேதி முதல் திருப்பதி பிரம்மோத்சவ விழாவை முன்னிட்டு 10 நாட்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

வரும் செப்டம்பர் 11 முத்ல20 வரை தினமும் பிற்பகல் மூன்று மணிக்கு அரக்கோணத்தில் இருந்து ரேணிகுண்டாவுக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.   திருத்தணி, புத்தூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் இந்த ரெயில் மாலை 4.30க்கு ரேணிகுண்டாவை அடையும்.

ரேணிகுண்டாவில் இருந்து சென்னைக்கு செப்டம்பர் 11 முதல் 20 வரை தினமும் மாலை 5.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் இரவு 0 மணிக்குச் என்னை கடற்கரையை வந்து அடையும்.   இந்த ரெயில் புத்தூர், ஏகாம்பரகுப்பம்,  திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் ஆகிய நிலையங்களில் நிற்கும்.

சென்னை கடற்கரையில் இருந்து செப்டம்பர் 11முதல் 20 வரை அரக்கோணம் வரை ஒரு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.  இந்த ரெயில் கடற்கரையில் இருந்து இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணி அளவில் அரக்கோணத்துக்கு வந்து சேரும்.