கொல்கத்தா: கடந்த 2002ம் ஆண்டின் நாட்வெஸ்ட் கோப்பையை வென்றது அற்புதமான தருணம் என்றும், பெரிய வெற்றிக்கான கொண்டாட்டம் சிறப்பானதாகத்தான் இருக்கும் என்றும் கூறியுள்ளார் சவுரவ் கங்குலி.
மேலும், டி-20 கிரிக்கெட் வடிவம் என்பது சிறப்பான ஒன்று என்றும் கூறி, தனது எண்ணத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார் சவுரவ் கங்குலி.
இந்திய டெஸ்ட் அணியின் துவக்க ஆட்டக்காரர் மாயங்க் அகர்வாலுடன், டிவிட்டரில் கலந்துரையாடினார் கங்குலி, அப்போது அவர் பலவற்றைப் பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறியதாவது, “நாட்வெஸ்ட் வெற்றி என்பது ஒரு சிறப்பான தருணம். சனிக்கிழமையன்று ரசிகர்களின் வெள்ளத்தில், ஒரு கடினமானப் போட்டியை லார்ட்ஸ் மைதானத்தில் வெல்வதென்பது சாதாரணமானதல்ல. எனவே, அதற்கான கொண்டாட்டமும் பெரிதாகத்தான் இருக்கும் (அவர் சட்டையைக் கழற்றி சுழற்றியது குறித்து).
கடந்த 2003ம் ஆண்டு உலகக்கோப்பையில், ஆஸ்திரேலியா தவிர, ஒவ்வொரு அணியையும் வெல்வதை பெரிய விஷயமாக கருதினோம். இறுதிப்போட்டியில், அந்தத் தலைமுறையின் சிறந்த அணியாக இருந்த ஆஸ்திரேலியாவால் நாங்கள் பந்தாடப்பட்டோம்.
டி-20 போட்டி என்பது முக்கியமான ஒன்று. இதன்மூலம், பேட்டிங்கில் அதிரடியாக ஆடுவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. நான் ஐபிஎல் தொடங்கிய, முதல் 5 ஆண்டுகள் விளையாடியுள்ளேன். அதேசமயம், டி-20 விளையாடுவதை நான் தொடர்ந்து விரும்பியிருப்பேன்” என்றார் தாதா கங்குலி.