அதிர வைத்த கேரளா சபாநாயகரின் மூக்கு கண்ணாடி விலை

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த பிடி பினு என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஒரு கேள்வி கேட்டிருந்தார். அதற்கு சட்டமன்ற செயலர் பதில் அளித்துள்ளார்.

அதில், ‘‘சபாநாயகர் 4 ஆயிரத்து 900 ரூபாய்க்கு மூக்கு கண்ணாடி பிரேம் மற்றும் 45 ஆயிரம் ரூபாய்க்கு கண்ணாடிக்கான லென்ஸ் வாங்கியுள்ளார். இதற்கான செலவு தொகை அரசு கருவூலத்தில் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இவர் 2016ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி முதல் 2017ம் ஆண்டு ஜனவரி 19ம் தேதி வரை சிகிச்சைக்காக 4.25 லட்ச ரூபாயை அரசிடம் பெற்று கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் கூறுகையில், ‘‘டாக்டர்கள் ஆலோசனை படி தான் தான் மூக்கு கண்ணாடி வாங்கியுள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார்.